பள்ளி பொதுத்தேர்வு பாதிக்க கூடாது என இரவில் போராட்டம் செய்த விவசாயிகள்.. கலங்க வைக்கும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாணவர்களுக்கு பாதிப்பில்லாமல் இரவில் போராடும் விவசாயிகள்-வீடியோ

  மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் அங்கு நடக்கும் பள்ளி பொது தேர்வுகள் பாதிக்க கூடாது என்று இரவில் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.

  6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது. இப்போதே 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

  இன்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள். மெரினா போராட்டம் போல இதிலும் நிறைய சுவாரசியமான தகவல்கள் இருக்கிறது.

  இரவு

  இதற்காக இவர்கள் நேற்று முழுக்க இரவில் மட்டும் பேரணி செய்து இருக்கிறார்கள். ஒரு சிறிய சத்தம் கூட எழுப்பி மக்களை எழுப்பிவிட்டுவிட கூடாது என்று இரவில் மிகவும் அமைதியாக போராட்டம் செய்து இருக்கிறார்கள். இவர்கள் பேரணிக்கான புதிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளனர்.

  ஏன் பகலில் இல்லை

  ஏன் பகலில் இல்லை

  இவர்கள் பகலில் அதே சாலையில் பேரணி செய்து இருந்தால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பாதிக்கப்படும். அவர்கள் ஒருவருடம் முழுக்க படித்தது பாதிக்கப்படும். இதனால் அவர்கள் இரவில் நடந்து இருக்கிறார்கள்.

  வைரல்

  இவர்கள் இரவு முழுக்க தூங்காமல் நடக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் இவர்கள் பேச்சுக்கு கூட எந்த சத்தமும் எழுப்பவில்லை. கால் மிதிபடும் சத்தம் கூட இல்லாமல் நடந்து இருக்கிறார்கள். இந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

  வயதானவர்கள்

  வயதானவர்கள்

  இந்த போராட்டத்தில் ஈடுபடும் 90 சதவிகித மக்கள், மிகவும் அதிக வயது கொண்டவர்கள். ஆனாலும் கூட இவர்கள் மக்களுக்காக பல விஷயங்களை சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். 80, 90 வயதில் மக்களுக்காக போராடும் இவர்களைத்தான் அம்மாநில பாஜக அரசு தீவிரவாதிகள் என்றுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  There are 6 reasons behind the Farmers protest in Mumbai. The Protest led by more than 35,000 farmers of All Indian Kisan Sabha (AIKS), demanding a complete waiver of loans, arrived in Mumbai on Sunday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற