எத்தனை வகை பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி குறைப்பு.. அருண் ஜெட்லி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: எத்தனை வகை பொருட்கள் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு உள்ளாகியுள்ளன என்ற விவரத்தை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. அதிலும் சில சொகுசு பொருட்களுக்கு ஜிஎஸ்டியுடன் கூடுதலாக செஸ் என்ற வரியும் விதிக்கப்படுகிறது.

Finance Minister Jaitley announce big GST relief

இந்த வரி விதிப்பிலுள்ள குறைகளை சீர் செய்ய மாதம் தோறும், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல சலுகைகளை அறிவித்தார்:

178 வகையான பொருட்கள், 28 சதவீத வரி விதிப்பிலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், இந்த உத்தரவு நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

13 பொருட்கள் மீது இதற்கு முன்பு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு இருந்த நிலையில், அது 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 வகை பொருட்கள் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீதமாக இருந்த 6 வகை பொருட்களுக்கு வரி கிடையாது என ஜெட்லி அறிவித்தார்.

28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி விதிப்புக்கு மாற்றப்பட்ட பொருட்களில் டிட்டர்ஜென்ட், மார்பிள், டாய்லெட் உபகரணங்களும் அடங்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tax rate on 13 items reduced from 18 per cent to 12 per cent, while tax rates have been reduced to 5 per cent on five items from 18 per cent. Besides, rate on 6 items lowered to zero from 5 per cent, says Finance Minister Jaitley.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற