For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனிமூட்டம்: 25 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - 5 பேர் பலி, 30 பேர் காயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிமூட்டத்தினால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிம்லாவை விட டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. நேற்று காலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெளிவாக காண முடியவில்லை.

Five dead and 30 injured in horrifying pile up on Yamuna Expressway

யமுனா விரைவுச்சாலையில் நேற்று காலையில் 'பெல்' நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். கொண்டிருந்தது. விரைவுச்சாலை என்பதால் அச்சாலையில் போகும் வாகனங்கள் வேகமாக செல்வது வழக்கம். அப்போது அதிகாரிகளை ஏற்றச்சென்ற இன்னோவா கார் திடீரென்று பேருந்து ஒன்றின் மீது திடீரென மோதியது.

இதில் அந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 'பெல்' நிறுவன பொது மேலாளர் ஆர்.என். சின்கா, அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான ஏ.கே. தாஸ், பிரதீப், சோப்னா பிங்கி ஆகியோர் படுகாயமடைந்தார். இந்த காருக்கு பின் வந்த டிரக் ஒன்று கவிழ்ந்திருந்த கார் மீது மோதியது. டிரக்குக்கு பின் அதிவேகத்தில் வந்த 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இந்த மோசமான விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆர்.என். சின்கா, தாஸ் மற்றும் மேலும் மூவரும் உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோசமான விபத்து காரணமாக யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பிற்பகல் வரை போக்குவரத்து முடங்கியது.

English summary
Five people were killed and 30 others injured in a massive accident on Wednesday morning as dense fog and low visibility struck horror on the Yamuna Expressway in the Capital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X