For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாலு மீதான தீவன ஊழல் வழக்கின் 17 ஆண்டுகால பயணம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கும் தீவன ஊழல் வழக்கு விசாரணை 17 ஆண்டுகாலம் நடைபெற்றுள்ளது.

1996 ஜனவரி

1996 ஜனவரி

பீகார் துணை ஆணையாளர் அமீத் காரே, கால்நடை அமைச்சக அலுவலகங்களில் நடத்திய ரெய்டில்தான் தீவனத்தின் பெயரில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

1996 மார்ச்

1996 மார்ச்

1996ஆம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

1996 மார்ச்

1996 மார்ச்

1996ஆம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

1997 ஜூன்

1997 ஜூன்

1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் லாலுவின் பெயர் இடம்பெற்றது.

சரண்

சரண்

1997ஆம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் லாலு சரண் அடைந்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றச்சாட்டுகள் பதிவு

குற்றச்சாட்டுகள் பதிவு

2000ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

ஜார்க்கண்ட்டுக்கு மாற்றம்

ஜார்க்கண்ட்டுக்கு மாற்றம்

ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டன./

விசாரணை தொடக்கம்

விசாரணை தொடக்கம்

2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிபிஐ நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.

லாலு முறையீடு

லாலு முறையீடு

தம் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் லாலு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

தீர்ப்பு ஒத்திவைப்பு

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இன்று தீர்ப்பு

இன்று தீர்ப்பு

பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உட்பட 45 பேர் இன்று குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

English summary
RJD supremo Lalu Prasad and 44 others has been convicted by a special Central Bureau of India (CBI) court in Ranchi in one of the cases - RC 20 A/96 - of the multi-crore fodder scam. Lalu has been convicted of corruption, criminal conspiracy and cheating and the sentencing will take place on October 3. Following is the chronology of the fodder scam in which Lalu Prasad has been convicted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X