உ.பி-க்கு அடுத்து கோவாவிலும் சிக்கல்.. முன்னாள் பாஜக அமைச்சர் காங்-இல் ஐக்கியம்
பனாஜி: கோவா பாஜக அரசில் அமைச்சராக இருந்த மைக்கேல் லோபோ தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மறுநாளே, காங்கிரஸில் இணைந்தார்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கோவா சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் பிப். 14ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் இப்போது பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அமைச்சராக இருந்த மைக்கேல் லோபோ திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து சில மணி நேரத்தில் மைக்கேல் லோபோ நேற்று (ஜன. 11) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மைக்கேல் லோபோ தனது மனைவி டெலிலாவுடன் காங்கிரசின் கோவா பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் காங். எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மைக்கேல் சியோலிம் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது மைக்கேல் லோபோ பாஜக அமைச்சரவையில் துறைமுக அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்-இல் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, "கோவாவுக்கு காங்கிரஸ் பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளது. இப்போதுள்ள சூழலில் நல்ல அரசை விரும்பும் அனைவருக்கும் காங்கிரஸ் மட்டுமே மாற்று. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 40இல் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும். கோவா மக்கள் பாஜகவை ஆட்சியில் இருந்த அகற்ற முடிவு செய்துவிட்டனர்.
இந்த நிலையைப் பயன்படுத்தி வேறு சில அரசியல் கட்சிகள் கோவாவில் குழப்பத்தை உருவாக்கி பாஜகவுக்கு உதவுகின்றன. இந்த புதிய கட்சிகளுக்குக் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கக் கூடாது என்பது ஒரே நோக்கம். அவர்களுக்குத் தொங்கு சட்டசபை உருவாக வேண்டும் என்பதே விருப்பம். அவர்களிடம் எந்தவொரு திட்டமும் இல்லை.
பாஜக அமைச்சரவையில் இருந்த போதிலும், அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை நான் எதிர்த்தே வந்துள்ளேன். காங். கட்சியில் இருந்து சிலர் புதிய கட்சிகளுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் தான் மாற்று என்பதை உணர தொடங்கியுள்ளனர். அவர்கள் விரைவில் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்புவார்கள்" என்றார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் உட்பட 5 பேர் பாஜகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications