தின்பண்டத்தில் ரப்பர் பொம்மை... தெரியாமல் விழுங்கிய சிறுவன் பலி - ஆந்திராவில் சோகம்

Subscribe to Oneindia Tamil

கோதாவரி: ஆந்திராவில் ரிங்க்ஸ் எனும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டத்தில் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏளூரு பகுதியைச் சேர்ந்த சிறுவன் நிரக்‌ஷன்குமார். நான்கு வயதாகும் சிறுவன் நிரக்‌ஷனுக்கு அவனது தந்தை அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனி பாக்கெட் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

Four year old boy dies after swallowing rubber toy in Andhra

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அந்த கவரில், இருந்த சிறிய ரப்பர் விளையாட்டு பொம்மையை, தின்பண்டம் என்று நினைத்து தவறுதலாக அந்த சிறுவன் அதை விழுங்கி இருக்கிறான்.

உடனடியாக, மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட அவனை உறவினர்கள் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

மயங்கிய நிலையில் இருந்த சிறுவன் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தற்போது நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் குழந்தைகளைக் கவர்வதற்காக சிறிய அளவிலான பொம்மைகள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ரப்பர் பொம்மையே குழந்தையின் உயிரை குடித்து விட்டது என்பது ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A four-year-old boy died after gulping a rubber toy in a snack packet accidently in Eluru town of West Godavari district in Andhra Pradesh.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற