For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்குப்பதிவில் வெடித்த வன்முறை.. மத்திய அமைச்சர் கார் மீது தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் ஒரே அடிதடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் அசன்சூல் தொகுதியில் தேர்தல் தொடர்பாக காலை முதல் வன்முறை தொடர்ந்து வருகிறது.

நாடு முழுக்க 71 தொகுதிகளில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், அசன்சூல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கு பாஜக ஆதரவு வாக்காளர்கள் செல்ல திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அனுமதிப்பதில்லை என கூறப்படுகிறது. பாஜக பூத் ஏஜென்ட்களையும், வெளியேற்றியுள்ளனர்.

Fresh poll violence breaks out in West Bengals Asansol

இதனால் இரு தரப்புக்கும் நடுவே ஆங்காங்கு மோதல்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் சிட்டிங் எம்பியும், மத்திய இணை அமைச்சருமான, பாபுல் சுப்ரியோ (பாஜக), தனது காரில் அங்கு வருகை தந்தார். அப்போது அவரது கார் கல் வீசி தாக்குதலுக்கு உள்ளானது.

வங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆந்திர எம்.பி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐவங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆந்திர எம்.பி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ

இதில், அவரது காரின் பின்பகுதியில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பாபுல் சுப்ரியோ கூறுகையில், விரும்பும் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். எங்கள் பூத் ஏஜென்ட்டுகளை வெளியே விரட்டியுள்ளனர். ஆனால் நான் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட இங்கே வந்துள்ளேன்.

மத்திய படைகள் பாதுகாப்பு வழங்குங்கள், நாங்கள் ஓட்டுப்போட தயார் என மக்கள் கூறுகிறார்கள். எனவே நான் மத்திய படைகளுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரில் செல்கிறேன். மமதா பானர்ஜி கட்சியினர்தான் இந்த வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு தரப்பு மக்கள் வாக்களிக்க வர விரும்புவதும், மற்றொரு தரப்பு அதை அனுமதிக்காமல் தடுப்பதுமாக இருப்பதால், தொகுதி முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

English summary
Fresh poll violence breaks out in West Bengal's Asansol. Jemua village had reported some incidents of trouble after villagers had decided to boycott elections after central forces were not deployed as many as 5 booths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X