For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சைலன்ட் மோடுக்கு போன மோடி... மவுனாசனம்.. ட்விட்டரை கலக்கும் 'மவுன்மோடி' ஹேஸ்டேக்..

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மவுனி என விமர்சித்த பிரதமர் மோடி சுஷ்மா ஸ்வராஜ், லலித் மோடி, வசுந்தரா ராஜே விவகாரங்களில் மவுனியாக இருப்பதை குறிப்பிட்டு ட்விட்டரில் 'மவுன்மோடி' எனும் ஹேஸ்டேக் கலக்கி வருகிறது.

2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மவுனியாக இருக்கிறார்.... அதனால் "மவுன்மோகன்சிங்" என்று நரேந்திர மோடி விமர்சிக்க கூட்டம் பலத்த கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தது..

From MaunMohan to MaunModi

ஆனால் ஓராண்டுக்குப் பின்னர் நிலைமை தலைகீழாகிக் கிடக்கிறது. லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோர் சிக்கியுள்ள நிலையில் அதுபற்றி வாயே திறக்காமல் இருக்கிறார் மோடி. இதேபோல் கல்வித் தகுதி பிரச்சனையில் சிக்கிய மற்றொரு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விவகாரத்திலும் மோடி மவுனமாக இருந்து வருகிறார்.

இதை விமர்சிக்கும் வகையில் #MaunModi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் தற்போது கலக்கி வருகிறது...

இந்த ட்விட்டரில் இடம்பெற்றுள்ள சில விமர்சனங்கள்:

Josey Devan YNWA LFC @indophilia: முதலில் கார்பரேட் நண்பர்களுக்காக ஏழை விவசாயிகளைப் புறக்கணித்தார்.. தற்போது ஊழல் அமைச்சர்களுக்காக மவுனியாக இருக்கிறார்...

Jumla Turn Off! @JumleBazi: 2014க்கு முன்னர்- காலிங் மோட்; 2014-க்குப் பின்னர் ப்ளைட் மோட் ; தற்போது- சைலண்ட் மோட்; அடுத்து சுவிட்ச் ஆப்?

இப்படி நீள்கிறது #MaunModi ஹேஸ்டேக்...

English summary
2014, During the high pitched Lok Sabha campaign, Narendra Modi won applause and cheer from a significant chunk of society when he punned on the then Prime Minister, Dr. Manmohan Singh's name by calling him, "Maunmohan Singh". 2015. One year and one month after sweeping to power, the Prime Minister is conspicuous by his silence on the Sushma Swaraj-Lalit Modi controversy. Now, #MaunModi, the hashtag trending on Twitter suggests that perhaps the PM has scored a self goal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X