For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை... : கெயில் நிறுவன சேர்மன் பிசி திருப்பதி தகவல்

Google Oneindia Tamil News

குண்டூர்: சுமார் இருபது பேரை பலிவாக்கிய கெயில் நிறுவன எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்நிறுவனத்தின் சேரமன் பி.சி திருப்பதி தெரிவித்துள்ளார்.

ஆந்திரம் மாநிலம் நாகராம் என்ற இடத்தில் உள்ள கெயில் நிறுவன எரிவாயு குழாய் இன்று அதிகாலை 4 மணியளவில் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஓன்.ஜி.சி ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் சுமார் 20 பேர் வரை பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படுகாயமடைந்த ஊழியர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.

தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சிக்குப் பின் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை அடுத்து நாகாரம் பகுதி முழுவதும் உள்ள எரிவாயு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து கெயில் நிறுவன சேர்மன் பிசி திருப்பதி கூறுகையில், ‘ஒன்.ஜி.சி சுத்தகரிப்பு நிறுவன வளகாத்தில் உள்ள "18" இன்ச் குழாயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தற்போது நாங்கள் மீட்பு பணிகளிலும் நிவாரண நடவடிக்கைகளிலும் தான் கவனம் செலுத்தி வருகிறோம் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
At least 20 persons are feared dead when a fire broke out in the gas trunk line of GAIL at about 4 a.m. on Friday at Nagaram village in Mamidikuduru mandal of East Godavari district in Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X