Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிர்ச்சி! பழங்குடியின பெண்களிடம்.. வெட்டவெளியில் கும்பலாக அத்துமீறிய இளைஞர்கள்.. ம.பியில் கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருவிழாவில் பழங்குடியின இளம் பெண்களிடம் வெட்டவெளியில் இளைஞர்கள் கும்பலாக அத்துமீறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவில் வசிக்கும் பழங்குடியின மக்களால் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்க இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

நூதனமான பகோரியா திருவிழா சடங்கு

நூதனமான பகோரியா திருவிழா சடங்கு


இதில் ஆண் தனது மனதுக்கு பிடித்த பெண்ணின் முகத்தில் சிவப்பு வண்ணச் சாயம் பூசுவார். அந்த பெண்ணுக்கும் ஆணை பிடித்திருந்தால் அவரும், அந்த ஆண் முகத்தில் வண்ணச் சாயம் பூசிக் கொள்ளலாம். பின்னர் வண்ணச் சாயம் பூசிக் கொண்ட ஜோடிகள் ஒன்றாக திருமணம் செய்துகொள்ளலாம்.

கோலாகளமாக தொடங்கிய பகோரியா திருவிழா

கோலாகளமாக தொடங்கிய பகோரியா திருவிழா

ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மார்ச் மாதம் மத்திய பிரதேசத்தில் பகோரியா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பில், பிலாலா, படேலியா பழங்குடியின சமுதாயத்தினர் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். பத்வானி, தார், அலிராஜ்பூர், கார்கோன் மற்றும் ஜாபுவா ஆகிய மாவட்டங்களில் இந்த பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

தார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பகேரியா திருவிழாவில் மக்களவை உறுப்பினர் சட்டார் சிங் தர்பார், சட்டமன்ற உறுப்பினர் பஞ்சிலால் மேதா, முன்னாள் எம்.எல்.ஏ, காலுசிங் தாகுர் தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புகழ்பெற்ற இந்த திருவிழாவை காண வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

பழங்குடியின பெண்களிடம் அத்துமீறல்

பழங்குடியின பெண்களிடம் அத்துமீறல்

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் திருவிழாவில் பங்கேற்ற பழங்குடியின இளம்பெண்களிடம் காவித் துண்டு அணிந்த இளைஞர்கள் கும்பலாக அத்துமீறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் 2 பெண்களை இளைஞர்களை பிடித்து அத்துமீறும் காட்சியும் அதை மற்ற இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது.

மத்திய பிரதேச காவல்துறை விளக்கம்

மத்திய பிரதேச காவல்துறை விளக்கம்

இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள டிரைபல் ஆர்மி, இது வெட்கக்கேடான சம்பவம் என்றும், மத்தியப் பிரதேச அரசு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அலிராஜ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வீடியோவில், பெண்களிடம் அத்துமீறியவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து டிஜிபியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். -

காங்கிரஸ் எம்.பி. கடும் கண்டனம்

காங்கிரஸ் எம்.பி. கடும் கண்டனம்

டிரைபல் ஆர்மி ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவை ரீட்வீட் செய்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "மத்திய பிரதேசத்தில் சங்கிகள் ஆட்சியில் பெண்கள் நடத்தப்படும் நிலை இது.. முழக்கம் மட்டும் தொடர்கிறது" எனவும் குறிப்பிட்டுள்ளார். -

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+