சூப்பர் சண்டே.. விளையாட்டு உலகின் மிக முக்கியமான நாள்.. உங்கள் டெய்லிஹண்டுடன் கொண்டாடுங்கள்
பெங்களூர்: வருகிற ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு உலகின் மிக முக்கியமான நாளாக இருக்க போகிறது. பல முக்கியமான விளையாட்டு போட்டிகள் காரணமாக அக்டோபர் 24ம் தேதி இந்த வருடத்தின் மிக முக்கியமான ஒரு ஸ்போர்ட்ஸ் திருவிழாவாக இருக்க போகிறது.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 தொடரின் மிக முக்கியமான ஆட்டமான இந்தியா பாகிஸ்தான் இடையிலான மேட்ச் அன்றுதான் நடக்க உள்ளது. அன்று மாலை 7.30 மணிக்கு இரண்டு அணிகளும் துபாயில் மோத உள்ளன. பாகிஸ்தான், இந்தியா மேட்ச் என்றாலே அனல் பறக்கும். அதிலும் உலகக் கோப்பை டி 20 ஆட்டம் என்றால் சொல்லவா வேண்டும்!

கோலி தலைமையிலான இந்திய அணியும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதிக்கொள்ளும் இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டமும் காத்துக்கொண்டு இருக்கிறது. அதிலும் கோலி தலைமையிலான அணி தோனியின் ஆலோசகர் பதவியால் புதிய பலம் பெற்றுள்ளது.
ஐபிஎல் முடித்துவிட்டு நேரடியாக டி 20 உலகக் கோப்பைக்கு வந்து இருக்கும் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் முழு பார்மில் இருக்கிறார்கள். பல ஐபிஎல் ஸ்டார்கள், சர்வதேச டி 20 போட்டிகளில் நிரூபித்தவர்கள், வருண் சக்ரவர்த்தி போன்ற புது முகங்கள் என்று இந்திய அணி கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்திய அணி கோப்பை வெல்ல வாய்ப்பு கொண்ட அணியாகவும் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் டி 20 போட்டிகளில் வலுவான அணியாக உள்ளது. ஹசன் அலி, ஹபிஸ், ஷாகின் அப்ரிடி போன்ற சிறப்பான பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர். அதேபோல் பாபர் அசாம், ரிஸ்வான், ஹபிஸ் போன்ற உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பாகிஸ்தான் அணியை இந்தியா உலகக் கோப்பை தொடர்களில் எப்போதுமே வீழ்த்திவிடும். அதை இந்த முறை எப்படியாவது மாற்ற வேண்டும் பாகிஸ்தான் துடிப்புடன் இருக்கும்.
எப்படி பெரிய ஃபுல் மீல்ஸ் சாப்பிடும் முன் உணவகங்களில் ஸ்டார்ட்டர்ஸ் கொடுப்பார்களா அப்படித்தான் இந்த பெரிய கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக FIM MotoGP World Cup Championship ஆட்டம் நடக்க உள்ளது. ஆம் FIM மோட்டோஜீபி உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் ஆட்டம் மீண்டும் சிறிய பிரேக்கிற்கு பின் தொடங்க உள்ளது. பார்முலா 1 ரேஸிங் ஆட்டமான இந்த Emilia-Romagna Grand priX ரேஸ் இத்தாலியில் உள்ள மிசானோவில் நடக்க உள்ளது.
வரும் அக்டோபர் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்திய நேரப்படி இந்த ஆட்டம் நடக்க உள்ளது. இந்த போட்டி இரண்டு பெரிய விஷயங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. முதல் விஷயம், பபியோ குவார்டாராரோ (Monster Energy Yamaha MotoGP) இதில் வெற்றிபெறும் பட்சத்தில் மகுடம் சூடும், முதல் பிரென்ச் வீரர் என்ற பட்டத்தை பெற முடியும். இரண்டாவது விஷயம் வேலன்டினோ ரோஸி (Petronas Yamaha SRT) தனது சொந்த மண்ணில் ஆட கூடிய கடைசி ரேஸ் இதுதான்.
இதனால் இந்த சீசன் ரேஸ் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வாரம் ரேஸிங் உலகிற்கும், விளையாட்டு உலகிற்கும் மிக முக்கியமானதாகவும், மறக்க முடியாத ஒன்றாகவும் இருக்க போகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான ஸ்பானிஷ் லீக் ஆட்டத்தின் ரியல் மாடரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடக்க உள்ளன. கிரிக்கெட் மேட்ச் நடக்கும் அதே நேரத்தில் இந்த போட்டியும் நடக்க உள்ளது.
சரியாக இந்த ஆட்டம் இந்திய நேரப்படி 7.45 மணிக்கு நடக்க உள்ளது. லியனோ மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் அணி மாறிய பின் நடக்க கூடிய முதல் ஆட்டம் என்பதால் இது மிக அதிக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இரண்டு அணிகளும் தங்கள் திறமையை நிரூபிக்க தீவிரம் காட்டி வரும். பொதுவாக அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்த கால்பந்து திருவிழா உச்சம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளும் கோப்பையை வெல்ல ஆர்வம் காட்டி வருகிறது.
இன்னொரு பக்கம் இத்தாலியன் சீரி ஏ கால்பந்து லீக்கும் அதற்கு மறுநாள் நடக்க உள்ளது. ஏஎஸ் ரோமா மற்றும் நப்போலி அணிகளுக்கு இடையில் இந்த ஆட்டம் திங்கள் கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு நடக்க உள்ளது. இரண்டு அணிகளும் வலுவாக இருப்பதால் இந்த ஆட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பின் அதே நாள் யுஎஸ் பார்முலா 1 ரேஸ் டெக்சாஸில் உள்ள சர்க்யூட் ஆப் அமெரிக்கன்ஸ் பகுதியில் நடக்க உள்ளது. பிற்பகல் 12.30 மணிக்கு இந்த ரேஸ் நடக்க உள்ளது. மேக்ஸ் வேர்ஸ்டாப்பேன் லெவிஸ் ஹாமில்டன் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் போட்டி தொடங்கி கார் ரேஸ் வரை அனைத்து போட்டிகளையும், விளையாட்டு தொடர்பான அப்டேட்களையும் நீங்கள் டெய்லிஹண்ட் ஸ்போர்ட்ஸ் (Dailyhunt's) பகுதியில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு எங்களுடன் இணைந்து இருங்கள்.












Click it and Unblock the Notifications