உ.பி.யில் 8 வயது சிறுமி பலாத்காரம்.. 24 வயது இளைஞரை அடித்துக் கொன்ற பெற்றோர், பொதுமக்கள்!
உத்தரப்பிரதேசத்தில் சிறுமியைப் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர்.
காஜியாபாத்: உத்தரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள லொனி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா (24). இவர் அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை, கடந்த வெள்ளியன்று கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், இது தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அச்சிறுமியை அவர் மிரட்டியுள்ளார்.

ஆனால், சனிக்கிழமை காலை ஜிதேந்திராவிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சென்று, ஜிதேந்திராவை தாக்கியுள்ளனர்.
மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஜிதேந்திரா கடுமையாக தாக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஜிதேந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜிதேந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஜிதேந்திரா கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரைக் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை உறவினர்கள் மற்றும் பொதுமக்களே சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications