கோவாவில் அமைச்சரவை மாற்றம்- கூட்டணி கட்சிகளுக்கு கல்தா- கட்சிதாவியோருக்கு பதவி

Subscribe to Oneindia Tamil

பனாஜி: கோவா அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் பிரமோத் சாவந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவிய 4 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளது.

ஒரே தேசம்... ஒரே கட்சி என்கிற புதிய முழக்கத்துடன் அரசியல் ஆடுகளத்தை அதகளப்படுத்தி வருகிறது பாஜக. ஒவ்வொரு மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைத்துப் போட்டு கட்சிகளையே காணாமல் செய்யும் யுக்தியை பாஜக கடைபிடித்து வருகிறது.

Goa CM to drom 4 ministers from Cabinet?

தற்போது கர்நாடகாவில் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ்- மதச்சார்பற்ற எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியது பாஜக. இதனால் குமாரசாமி அரசு கவிழும் நிலையில் இருக்கிறது.

கோவாவில் ஆளும் பாஜக திடீரென காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏக்களை வளைத்தது. கோவாவில் காங்கிரஸுக்கு 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கூண்டோடு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் ஐக்கியமானதால் கட்சித் தாவல் தடை சட்டம் அவர்கள் மீது பாயாது.

தற்போது கட்சி தாவியவர்கள் 4 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட இருக்கிறது. இதனால் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கோவா பார்வார்டு கட்சியின் 3 அமைச்சர்கள் மற்றும் ஒரு சுயேட்சையாக வென்ற ஒரு அமைச்சர் ஆகியோரை கேபினட்டில் இருந்து கழற்றிவிட முடிவு செய்துள்ளாராம் முதல்வர் பிரமோத் சாவந்த்.

இதனால் கோவா அரசியலிலும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+