For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. அங்கே பாருங்க.. நடுக்கடலில் என்னதுன்னு.. மிதந்து வந்த "தங்கத் தேர்!" ஆந்திராவில் ஆச்சரியம்

Google Oneindia Tamil News

அமராவதி: அசானி புயலின் தாக்கத்தால் ஸ்ரீகாகுளம் கடலில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட தங்க நிறத்தினாலான தேரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

Recommended Video

    கடலில் மிதந்து வந்த தங்கத்தேர்... ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள்!

    தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று புயலாக மாறியது. இந்த புயல ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அது கடலுக்குள் சென்று ஆந்திரா கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. தற்போது வலுவிழந்த இந்த புயலால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கோடைக்காலத்தில் கடும் வெப்பம் தணித்துள்ளது.

    அசானி புயல் தாக்கம்...சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து அசானி புயல் தாக்கம்...சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து

     ஆந்திரா

    ஆந்திரா

    இந்த புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது. மச்சிலிப்பட்டினத்தின் தென் பகுதியில் கரையை கடக்கும் நிலையில் கடலில் காற்று மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் வீசியது. இதனால் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டது.

     ஸ்ரீகாகுளம் மாவட்டம்

    ஸ்ரீகாகுளம் மாவட்டம்


    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சுன்னப்பள்ளி கடற்கரை பகுதியில் தங்க நிறத்தினாலான தேர் அடித்து கொண்டு வரப்பட்டது. தூரத்தில் ஏதோ ஒரு பெரிய பொருள் வருவதை மீனவர்களும் கிராமமக்களும் கண்டனர். இதனால் அதை காண கடற்கரையிலேயே திரண்டனர்.

     தேர்

    தேர்

    தேர் கரையையொட்டி வந்ததும் மீனவர்கள் அதை கரைக்கு இழுத்து வந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது அது ஒரு தேர் என்பது!. எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. தங்க நிறத்தில் இருந்தது. அசானி புயலால் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டது மட்டும் மக்களுக்கும் மீனவர்களுக்கும் தெரியவந்தது.

     எங்கிருந்து வந்தது

    எங்கிருந்து வந்தது

    இதையடுத்து கடலோர காவல் படையினருக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த அதிகாரிகள் அந்த தேரை பார்வையிட்டனர். அந்த தேரின் மீது வேறு ஒரு நாட்டு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. இதனால் அந்த தேர் வெளிநாட்டிலிருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஜப்பானிய கட்டடக் கலையான வாயோ ஸ்டைலில் இருந்ததால் இந்த தேர் ஜப்பானிலிருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் இந்த தேரில் 16-01-22 என எழுதப்பட்டிருந்தது.

    English summary
    Golden Chariot washed in Srikakulam as Cyclone Asani stagnant in the Andhra coast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X