For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி பேசும் நெட்டிசன்களுக்கு கூகுள் குறி! அசத்தல் சேவைகள் அறிமுகம்

உள்ளூர் மொழிகளில் இணையத்தை பயன்படுத்த விரும்பும் மக்கள் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதை கணித்து கூகுள் புது வசதிகளை அளித்துள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கூகுள் நிறுவனம் உள்நாட்டு மொழிகள் பேசும் மக்களை குறி வைத்து பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

ஸ்மார்ட்போன் யுகத்தில், உள்ளூர் மொழிகளில் இணையத்தை பயன்படுத்த விரும்பும் மக்கள் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதை கணித்து கூகுள் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

Google’s Indian bonanza: Support to 22 Indian languages across products

"ஒவ்வொரு இந்தியருக்கும் இணையத்தை கூகுள் நீட்டிக்க விரும்புகிறது. இணையத்தை அணுகுவதிலிருந்து இந்தியர்களைத் தடுத்து நிறுத்தும் இடைவெளிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்தியாவில் 400 மில்லியனுக்கும் (40 கோடி) அதிகமான இணைய பயனர்கள் உள்ளனர். 2020ல் இது 600 மில்லியனாக (60 கோடி) உயரும்" என்கிறார் கூகுள் நிறுவனத்தின், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான துணை தலைவர் ராஜன் ஆனந்தன்.

கூகுள் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் கீழ்கண்ட சுவாரசிய தகவல்களை தெரிவிக்கின்றன.

*உலகமெங்கும் 50 கோடி மக்கள் கூகுள் டிரான்ஸ்லேட் (மொழிபெயர்ப்பு வசதி) பயன்படுத்துகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியா, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் தாய்லாந்தை சேர்ந்தவர்களாகும்.

*Neural Machine Translation மூலமாக, வெப்சைட்டின் எழுத்துக்களை முழுமையாக மொழியாக்கம் செய்ய முடியும். இதன் மூலம், அனைத்து மொழி வெப்சைட்டையும் தனக்கு அறிந்த மொழியில் படிக்கும் வாய்ப்பு பயனாளர்களுக்கு கிடைக்கும். மொழிபெயர்ப்பின் துல்லியத்தன்மையையும் இப்போது அதிகரித்துள்ளது. க்ரோம் ப்ரவுசரில் இப்பயன் கிடைக்கும்.

*புதுவகை மொழி பெயர்ப்பு வசதி, கூகுள் செர்ச், மேப்புகளிலும் கிடைக்கும். செல்போன், வெப் என இரு வகை பயனாளர்களுக்கும் இதனால் பயன் கிடைக்கும். ரெஸ்ராடரண்ட், ஹோட்டல்கள் உட்பட எதற்கு ரிவ்யூ செய்ய வேண்டுமானாலும் தாய் மொழியிலேயே அதை செய்யலாம்.

*Gboard கீபோர்டு மூலம், 22 இந்திய மொழிகளில் டைப் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கீபோர்டு ஆப்பை அப்டேட் செய்தாலே போதும், புதிய வசதிகள் கிடைக்கும்.

Google’s Indian bonanza: Support to 22 Indian languages across products

*இந்த கீபோர்டிலேயே கூகுள் சர்ச் ஆப்ஷனும் தரப்பட்டுள்ளது. எமோஜிகளை தேடுவதையும் அந்த கீபோர்டிலேயே செய்ய முடியும். அதுவும் உள்ளூர் மொழியிலேயே செய்ய முடியும். மேலும் டிரான்ஸ்லேட் வசதியும் தரப்பட்டுள்ளது. கூகுளில் செர்ச் செய்வதை அப்படியே ஷேர் செய்ய முடியும். இது வாட்ஸ்அப் போன்ற மெசேஜ் செயலிகளை பயன்படுத்துவோருக்கு வரப்பிரசாதம்.

* ஆக்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்சுடன் இணைந்து, ஹிந்தி டிக்ஷனரியை கூகுள் செர்ச்சில் கொண்டுவந்துள்ளது கூகுள்.

*ஆங்கில மொழியை பயன்படுத்தி இணையத்தில் தேடுவோரை விட உள்ளூர் மொழிகளில் தேடுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. டிஜிட்டல் பேமென்ட், டிஜிட்டல் ஊடகங்களில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். ஆன்லைன் செய்தி சேவை நிறுவனங்களை பயன்படுத்துவோர் வளர்ச்சி ஆண்டுக்கு 22 சதவீதீம் என்ற அளவில் இருக்கப்போகிறது. உள்ளூர் மொழிகளிலான மெசேஜ்களுக்கான பயன்பாடு 19 சதவீத வளர்ச்சியை காணப்போகிறது.

*மொத்த இணைய பயன்பாட்டாளர்களில் 78 சதவீதம் செல்போன் மூலமே இணையத்திற்கு வருகிறார்கள். உள்ளூர் மொழிகளை பயன்படுத்தும் இணைய பயன்பாட்டாளர்களில் 99 சதவீதம் பேர் மொபைல்போனைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

*ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவின் உள்ளூர் மொழிகளை 234 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் இணையத்தை பயன்படுத்துவோர் 175 மில்லியன்தான். இந்த வித்தியாசம் அதிகரித்து செல்ல உள்ளது. விரைவிலேயே ஹிந்தி மொழி பயனாளர்கள் எண்ணிக்கை, ஆங்கில பயனாளாளர்கள் எண்ணிக்கையைவிட கூட உள்ளது. பிற மொழிகளையும் சேர்த்தால் உள்ளூர் மொழிகளே இணையத்தில் இனிமேல் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புள்ளது.

*தமிழ், ஹிந்தி, கன்னடம், வங்க மொழி மற்றும் மராத்தி ஆகியவை, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளாக உள்ளன. தமிழ், மராத்தி, வங்கமொழி மற்றும் தெலுங்கு மொழி பயனாளர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

*இந்திய உள்ளூர் மொழிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 18 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. அடுத்த நான்கு வருடங்களில், உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 53 கோடி அளவுக்கு உயரும்.

English summary
Continuing with its commitment to bring the internet alive for a billion Indians, Google on Tuesday announced a new set of products and features for Indian languages to better serve the needs of Indians who are coming online rapidly and released findings of a joint report by Google and KPMG India titled 'Indian Languages- Defining India's Internet'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X