ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கிய மத்திய அரசு- ஆத்திரத்தில் குதிக்கும் “மேற்படி” ரசிகர்கள்
டெல்லி: இந்தியாவில் அதிக அளவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அடிப்படை காரணங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் பாலியல் இணையதளங்களை மத்திய அரசு நேற்று திடீரென தடை செய்தது.
அதனைத் தொடர்ந்து "அந்த மாதிரி" இணையதளங்களைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், தங்கள் கோபத்தை, சமூக வலைதளங்களில் கண்டனமாக பதிவு செய்து திட்டித் தீர்த்து வருகின்றனர். நேற்று முன் தினம் முதல் பாலியல் இணையதளங்களில் வழக்கமாகக் காணப்படும் வீடியோ காட்சிகளுக்குப் பதிலாக ஒன்றுமே இல்லாமல் வெறும் காற்று மட்டும்தான் வருகிறது.. அதாவது வெற்று ஸ்கிரீன் மட்டும் தெரிந்தது.

முடக்கப்பட்ட இணையதளங்கள்:
அத்தகையவர்கள், நேற்று காலை மீண்டும் "மேற்படி" இணையதளங்களை தொடர்பு கொண்ட போது அந்த தளங்கள் மத்திய அரசால் முடக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.

இங்கே தெரியலை அங்க:
குறிப்பாக பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகிய பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனங்கள், வோடபோன், ஹாத்வே, ஏ.சி.டி போன்ற தனியார் மற்றும் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனங்களில் வெளிவந்து கொண்டிருந்த பலான இணையதளங்கள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் தங்கள் ஊரில் மட்டும் தான் அத்தகைய இணையதளங்கள் முடக்கப்பட்டனவா அல்லது எல்லா ஊர்களிலும் தெரியவில்லையா என அறிய ஆசைப்பட்டனர்.

ஹைய்யோ எங்களுக்கும் தெரில:
இணையதளங்கள் மூலம் குறிப்பிட்ட சில இணையதளங்களின் பெயர்களை குறிப்பிட்டு அவை, உங்கள் ஊரில் தெரிகின்றனவா? என கேள்வி எழுப்பினர். கொல்கட்டா, மும்பை, பாட்னா, சென்னை என பல நகரங்களில் உள்ள "மேற்படி" இணையதள விரும்பிகள் எங்களுக்கும் தெரியவில்லை என பதிலளித்தனர்.

இது எங்கள் ”அடிப்படை” உரிமை:
அதையடுத்து, தங்கள் கோபத்தை சமூக வலைதளங்கள் மூலம் காட்டினர். "ஆபாச இணையதளங்களை முடக்கியது எங்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல். நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? எதற்காக எங்களின் விருப்பமான தளங்களை மத்திய அரசு முடக்கியது? என கேள்வி எழுப்பினர்.

40 சதவீதம் இந்தியாவில்தான்:
எனினும் நேற்று நள்ளிரவு வரை பெரும்பாலான முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் அப்படிப்பட்ட இணையதளங்கள் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில்தான் 40 சதவீதமளவிற்கு பாலியல் தொடர்பான ஆபாச இணையதளங்கள் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்று ஆய்வு ஒன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications