For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமங்களுக்கு 2 ஸ்வைப்பிங் மிஷின்கள் வழங்கப்படும்: அருண் ஜேட்லி அறிவிப்பு

மின்னணு முறையில் பணம் செலுத்தினால் தள்ளுபடி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மின்னணு பணப்பரிமாற்ற முறையிலான பணம் செலுத்தும் முறையை ஊக்கப்படுத்தும் விதமாக கிராமங்களுக்கு இரண்டு ஸ்வைப்பிங் மிஷின்கள் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேவேளை மின்னணு பண பரிமாற்றத்திற்கு மக்கள் மாற வேண்டும் என்றும் மத்திய அரசு கூறிவருகிறது.

Govt to install swipe machines in villages

இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மின்னணு முறையிலான பணம் செலுத்தும் முறையை ஊக்கப்படுத்தும் விதமாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி புதிய கரன்சி நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. மின்னணு பணப் பரிமாற்றமே பண மதிப்பிழப்பு அறிவிப்பின் இழக்காகும். பணப்பரிமாற்றம் அரசுக்கு செலவை கூட்டுவதால் மின்னணு பரிமாற்றமே இலக்கு என்றார்.

மேலும் 10,000 மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு இரண்டு ஸ்வைப்பிங் மிஷின்கள் வழங்கப்படும் எனவும், இதற்காக ஒரு லட்சம் கிராமங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

English summary
Finance Minister Arun Jaitley Says, Govt to install swipe machines in villages
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X