மரண தண்டனையை ஒழிக்க முடியாது... மத்திய அரசு திட்டவட்டம்
டெலி: நாட்டில் மரண தண்டனையை ஒழிப்பதற்கு அரசு விரும்பவில்லை என்று ராஜ்யசபாவில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை ராஜ்யசபாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் நேற்று பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், குற்றங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கீழ்த்தரமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மரண தண்டனையால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது என்றார்.
அவரது கருத்தை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், இந்தியா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 36 நாடுகள்தான் மரண தண்டனையை அமல்படுத்துகின்றன என்றார்.
எம்.பி.க்களின் கருத்துக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், நாட்டில் தற்போதுள்ள சூழலானது மரண தண்டனையை ஒழிக்கும் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் அதனால் பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு அவரது முயற்சி தோற்றாலும் அவர் மாநில ஆளுநரையும் ஜனாதிபதியையும் அணுகலாம் என்றார் கிரண் ரிஜிஜு.
அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு டி.ராஜாவிடம் ரிஜிஜுவும், ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க டி.ராஜா மறுத்து விட்டார். அதன் பின் அவரது தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் சபையில் நிராகரிக்கப்பட்டது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications