"பல்கலை. வேந்தர்.." அடிமடியிலேயே கை வைத்த மம்தா பானர்ஜி கட்சி.. ஆளுநர் அதிகாரத்தை குறைக்க பிளான்
கொல்கத்தா: ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரையே வேந்தராக அறிவிப்போம் என மேற்கு வங்க கல்வித் துறை பிரத்யா பரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை அந்த மாநிலத்தின் ஆளுநர் தான் நியமிப்பார்.
தமிழ்நாட்டில் தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆர். வேல்ராஜ், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ் கவுரி ஆகியோர் உள்ளனர்.

மேற்று வங்கம்
அதேநேரம் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக எப்போதும் அந்த மாநிலத்தில் வேந்தர்களா இருப்பார்கள். மேற்கு வங்கத்திலும் இப்போது அனைத்து பல்கலைக்கழகங்களுக்குமான வேந்தராக அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் உள்ளார். இருப்பினும், இப்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் மேற்கு வங்க அரசின் பல முக்கிய முடிவுகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதாக திரிணாமுல் விமர்சித்து வருகிறது.

துணை வேந்தர்கள் கூட்டம்
இதனிடையே கடந்த டிசம்பர் 18ஆம் தேதி தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆளுநர் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த கூட்டத்தைத் துணை வேந்தர்கள் புறக்கணிக்கப்போவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 23ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், துணை வேந்தர்கள் யாருமே அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

பரபரப்பு குற்றச்சாட்டு
இதற்கு முன்னரும் இதேபோல ஒரு கூட்டத்திற்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்திருந்தார். அப்போதும் துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து இதே நிகழ்வுகள் நடந்து வருவதால் கடும் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஜக்தீப் தன்கர், ஆளும் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே துணை வேந்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினர்.

முதல்வரை வேந்தராக்குவோம்
இந்தச் சூழ்நிலையில் தான் ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரையே வேந்தராக அறிவிப்போம் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் மேற்கு வங்க கல்வித் துறை பிரத்யா பரசு! இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கவர்னர் பதவியில் இருக்கும் ஒரே காரணத்திற்காகப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னரே இருக்கும் காலனித்துவ மரபைத் தொடர வேண்டுமா அல்லது சிறந்த அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை வேந்தராக நியமிக்க வேண்டுமா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டிய நேரம் இது" எனப் பதிவிட்டுள்ளார்,

தீவிர ஆலோசனை
மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரத்யா பரசு, "உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் ஆளுநர் எல்லைகளை மீறிச் செயல்படுகிறார். எனவே மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க இருக்கும் வாய்ப்புகள் குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். சரியான நபரை வேந்தராக நியமிக்கும் வரை இடைக்கால வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications