சிகரெட் உட்பட 50 பொருட்களுக்கு மட்டுமே இனி 28% ஜிஎஸ்டி வரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிகரெட் உட்பட 50 பொருட்களுக்கு மட்டுமே இனி 28% ஜிஎஸ்டி வரி!- வீடியோ

குவகாத்தி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒரே வரி என்ற அடிப்படைக்கு இதனால் மாறியது.

ஜிஎஸ்டி வரி 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. அதிலும் சில சொகுசு பொருட்களுக்கு ஜிஎஸ்டியுடன் கூடுதலாக செஸ் என்ற வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பிலுள்ள குறைகளை சீர் செய்ய மாதம் தோறும், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

 அமைச்சர்கள் கருத்து

அமைச்சர்கள் கருத்து

தங்கள் மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை நிதி அமைச்சர்கள் எடுத்துரைத்து விவாதிப்பார்கள். இறுதியில் அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். பரிசீலிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும், அல்லது அடுத்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சர் கூறுவது வழக்கம்.

 ஜெயக்குமார் பங்கேற்பு

ஜெயக்குமார் பங்கேற்பு

இந்தநிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 23வது கூட்டம் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதேபோல பிற மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

 50 ஆடம்பர பொருட்கள்

50 ஆடம்பர பொருட்கள்

கூட்டத்தின் இடைவெளியில், பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி நிருபர்களிடம் கூறுகையில், மொத்தம் 50 பொருட்களை மட்டுமே 28 சதவீத வரி விதிப்பு வரம்பிற்குள் வைத்திருக்க இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அவையும் கூட ஆடம்பர பொருட்கள்தான்.

 வரி குறைக்கப்பட்டது

வரி குறைக்கப்பட்டது

சூயிங்கம், சாக்லேட், ஆப்டர் ஷேவ் லோஷன், வாசனை திரவியங்கள், வாஷிங் பவுடர், டிட்டர்ஜென்ட், மார்பிள் ஆகியவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டு 18 சதவீத ஜிஎஸ்டி வரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். குஜராத்தில் வணிகர்கள் அதிக அளவு உள்ளனர். அவர்கள் ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்ட அதிக வரி விதிப்பால் பாஜக மீது கோபத்தில் உள்ளனர். குஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.

 173 பொருட்கள் விலை குறையும்

173 பொருட்கள் விலை குறையும்

முன்பு 228 பொருட்கள் 28 சதவீத உச்சபட்ச வரி விதிப்பு வரம்பில் இருந்தன. இப்போது 178 பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டு, வெறும் 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி வரம்புக்குள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சிகரெட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஏசி, வாஷிங்மெஷின் போன்ற ஆடம்பர பொருட்கள் மட்டுமே அடங்கும். அதேநேரம், பெயிண்ட், சிமெண்ட் போன்ற பொருட்களும் இந்த வரம்பில்தான் உள்ளன. சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என மாநில அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
GST Council keeps only 50 items out of 223 in highest slab; 173 items to become cheaper.
Please Wait while comments are loading...