Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் தேர்தலில் நாளை ரிசல்ட்.. 10 ஆண்டு இல்லாத அளவுக்கு குறைந்த ஓட்டுப்பதிவு.. யாருக்கு சாதகம்?

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்நிலையில் தான் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குஜராத் சட்டசபை தேர்தலில் குறைவாக 64.33 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளதால் இது யாருக்கு சாதமாக அமைய உள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக டிசம்பர் 1ம் தேதியும், டிசம்பர் 5ம் தேதி 2வது கட்டமாகவும் தேர்தல் நடந்தது.

டிசம்பர் 1ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகள், டிசம்பர் 5ல் நடந்த 2ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகள் என மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

64.33 சதவீத ஓட்டுப்பதிவு

64.33 சதவீத ஓட்டுப்பதிவு

இங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது. முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளில் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 1,621 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தான் குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தன. மொத்தம் 64.33 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.

நாளை வெளியாகும் ரிசல்ட்

நாளை வெளியாகும் ரிசல்ட்

இந்நிலையில் தான் நாளை வெளியாக உள்ள குஜராத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் இதுவாகும். இதனால் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர இருவரும் கடினமாக உழைத்தனர். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அது சாதனையாக கருதப்படும். மாறாக காங்கிரஸ் வென்றால் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும். ஆம்ஆத்மி வென்றால் புதிதாக முதல் முதலாக அக்கட்சி ஆட்சியை பிடிக்கும் பெருமையை பெறும். இதனால் குஜராத் தேர்தல் ரிசல்டை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

3.16 கோடி மட்டுமே ஓட்டளிப்பு

3.16 கோடி மட்டுமே ஓட்டளிப்பு

இதற்கிடையே தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய 2 தேர்தல்களை ஒப்பிடும்போது குஜராத்தில் இந்த முறை பதிவான ஓட்டுக்கள் என்பது மிகவும் குறைவானது என தெரியவந்துள்ளது. மொத்தம் 4.9 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்த நிலையில் 3.16 கோடி மக்கள் மட்டுமே ஓட்டளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது நடந்து முடிந்த தேர்தலில் குஜராத்தில் மொத்தம் 64.33 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது.

முந்தைய தேர்தல்களை விட குறைவு

முந்தைய தேர்தல்களை விட குறைவு

இது கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். கடந்த 2017ல் நடந்த தேர்தலில் குஜராத்தில் 69.01 சதவீத ஓட்டுக்களும், கடந்த 2012 தேர்தலில் 71.02 சதவீத ஓட்டுக்களும் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் தற்போது 64.33 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. இது தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யாருக்கு சாதகம்?

யாருக்கு சாதகம்?

பொதுவாக முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது குறைந்த ஓட்டுப்பதிவு பதிவானால் அது ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவை கொடுக்கலாம் என்ற கருத்து உண்டு. இது தான் கடந்த காலங்களில் பலமுறை நடந்துள்ளது. குஜராத்தில் இது பாஜகவுக்கு சாதகமாக கருதப்படுகிறது. இருப்பினும் கூட கடந்த காலங்களில் குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே மட்டுமே போட்டிகள் நடந்தன. தற்போது ஆம்ஆத்மி கட்சியும் கோதாவில் குதித்துள்ளது. இதனால் தற்போதைய தேர்தலில் பதிவாகி உள்ள வாக்குகள் அடிப்படையில் எந்த கட்சியினர் வெல்வார்கள் என்பதை நாம் கணித்து விட முடியாது.

கருத்து கணிப்புகள் என்ன?

கருத்து கணிப்புகள் என்ன?

இருப்பினும் கூட குஜராத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் கடந்த டிசம்பர் 5 ம் தேதி வெளியிடப்பட்டன. குஜராத்தில் ஆட்சியை பிடிக்க 92 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு சாதமாக உள்ளது. பாஜக 120க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இந்தியா டூடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பின்படி பாஜக 131-151 இடங்களையும், காங்கிரஸ் 16-30 இடங்களையும், ஆம் ஆத்மி 9-21 இடங்களை வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் கருத்து கணிப்பின்படி குஜராத்தில் பாஜக 128 - 148 இடங்களிலும், காங்கிரஸ் 30 - 42 இடங்களிலும் ஆம் ஆத்மி 2 - 1 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+