For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் சட்டசபை முதல் கட்ட தேர்தல் 2022.. பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் எவை? வரலாறு சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் இடம் பெற்றுள்ள தொகுதிகளில் பாஜக ஆதரவு தொகுதி, காங்கிரஸ் ஆதரவு தொகுதிகள் என இரண்டும் கலந்து காணப்படுகிறது.

182 சட்டசபையை கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.

குஜராத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸும் ஆம்ஆத்மியும் தீவிரம் காட்சி வருகின்றன. தொடர்ந்து 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் மேலும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடர பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது.

மொத்த “பவரை” காட்டிய பாஜக! விரட்டும் காங்கிரஸ், ஆம் ஆத்மி.. குஜராத் தேர்தலில் நெருங்கும் கிளைமாக்ஸ் மொத்த “பவரை” காட்டிய பாஜக! விரட்டும் காங்கிரஸ், ஆம் ஆத்மி.. குஜராத் தேர்தலில் நெருங்கும் கிளைமாக்ஸ்

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் போட்டியிட 1,621 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் குஜராத் சட்டசபைக்கு வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 788 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

 89 தொகுதிகள்

89 தொகுதிகள்

இந்த 89 தொகுதிகளில் 43 தொகுதிகளில் பாஜக செல்வாக்கு கொண்ட தொகுதிகளாகும். கடந்த முறை நடந்த இரு சட்டசபை தேர்தல்களிலும் இந்த தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. 17 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு கொண்டவையாக அறியப்படுகின்றன. 28 தொகுதிகளை ஆராய்ந்த போது கடந்த 2012, 2017 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர்.

முக்கியமான தொகுதி

முக்கியமான தொகுதி

ராஜ்கோட் மேற்கு எனும் தொகுதி முக்கியமான தொகுதியாகும். இதை பாஜக கோட்டை என சொல்லலாம். இங்கு 1960களில் பாரதிய ஜனசங்கம் கட்சி செல்வாக்கு பெற்றதாக இருந்தது. 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராஜ்கோட்டில் உள்ள இரு தொகுதிகளில் ஒன்றில் பாரதிய ஜனசங்கம் கட்சியும் இன்னொரு தொகுதியில் ஸ்வதந்திரா கட்சியும் வென்றுள்ளது.

டிரென்ட்

டிரென்ட்

அன்று முதல் இந்த டிரென்ட் தொடர் கதையாகிவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 76 சதவீதம் வாக்குகளை இந்த சட்டசபை தொகுதியிலிருந்து பெற்றது. ராஜ்கோட் மேற்கில் வல்சாத் மற்றும் அமரேலி ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 1990 ஆம் ஆண்டு பாஜக போட்டியிடும் வரை காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்தது. எப்போது பாஜக போட்டியிட்டதோ அப்போதிலிருந்தே பாஜகவின் எஃகு கோட்டையாகிவிட்டது.

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல்

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது கூட வல்சாத் சட்டசபை தொகுதியில் பாஜகவின் வாக்கு சதவீதம் 79 சதவீதமாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 19 சதவீத வாக்குகளையே பெற்றது. அது போல் அமரேலி தொகுதியை எடுத்துக் கொண்டால் இது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கொண்ட தொகுதியாகும். கடந்த 4 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரேஷ் தனானி 3 முறை வென்று எம்எல்ஏவாகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபை தேர்தலின் போதும் கூட இந்த தொகுதியின் அனைத்து சட்டசபை தொகுதிகளில் தோற்ற போதும் கூட காங்கிரஸ் கட்சி , அமரேலி தொகுதியில் மட்டும் 42 சதவீத வாக்குகளை பெற்றது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் 41 தொகுதிகள் ஊரக பகுதிகளாகும். 17 தொகுதிகள் நகர்ப்புற தொகுதிகளாகும். இதில் காங்கிரஸ் கட்சி சவுராஷ்டிராவில் உள்ள ஊரக பகுதிகளில் செல்வாக்கு கொண்டதாக உள்ளது. அதே வேளையில் பாஜகவோ நகர்ப்புற தொகுதிகளில் செல்வாக்கு கொண்டது.

 குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல்

குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல்

கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 89 தொகுதிகளில் 63 தொகுதிகளில் பாஜகவும் 22 தொகுதிகளில் மற்ற கட்சிகள் 4 தொகுதிகளிலும் வென்றுள்ளது. அது போல் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபை முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. ஆனால் பாஜக 49 சதவீத வாக்குகளுடன் 48 இடங்களில் வென்றது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 85 சட்டசபை தொகுதிகளில் பாஜகவும், 4 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளது.

English summary
Gujarat Assembly election 2022: Do you know Phase 1 election has some of BJP stronghold seats and also neck to neck battle seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X