மோடியின் குஜராத்தில் பாஜகவுக்கு 49% ஆதரவு, காங்கிரஸுக்கும் 41% ஆதரவு!
டெல்லி: குஜராத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் நரேந்திர மோடி இப்போது பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அந்தக் கட்சியும் தேசிய அளவில் அதிக இடங்களில் வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவாகவே உள்ளது.

பாஜகவே வெல்லும்...
குஜராத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 22 இடங்களில் வெல்லும் என்று என்டிடிவி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த தேர்தலைவிட 7 இடங்கள் அதிகமாகும்.

காங்கிரசுக்கு பெரும் தோல்வி...
கடந்த தேர்தலில் 11 இடங்களில் வென்ற காங்கிரஸ் இந்தமுறை வெறும் 4 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

வாக்குகள் வித்தியாசம் அதிகமில்லை:
வரும் தேர்தலில் பாஜக மொத்தம் 49 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் இது கடந்த தேர்தலைவிட 3 சதவீதம் அதிகம் என்றும் என்டிடிவி தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் 41 சதவீத வாக்குகளைப் பெறும் என்கிறது கருத்துக் கணிப்பு.

ஆச்சரியமே...
இது கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை விட 3 சதவீதம் குறைவு தான் என்றாலும், குஜராத்தில் காங்கிரஸ் வழி நடத்த ஒரு உருப்படியான தலைவர் கூட இல்லாத நிலையில் 41 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெறுவது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
அதுவும் குஜராத்தைத் தான் முன் மாதிரியாகக் காட்டி தேசிய அளவில் மோடியை முன் நிறுத்தி வாக்கு கேட்டு வருகிறது பாஜக. இந்த நிலையிலும் காங்கிரஸ் 41 சதவீத வாக்குகளைப் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐபிஎன் கருத்துக் கணிப்பு..
ஆனால், சிஎன்என்-ஐபிஎன் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 55 சதவீத ஆதரவும் காங்கிரசுக்கு வெறும் 31 சதவீதமும் மட்டுமே ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குஜராத்தின் அனைத்துத் தொகுதிகளையும் மோடி வெல்வார் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
எது சரி, எது தவறு என்பது மே 16ம் தேதி தான் தெரியும்...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications