For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7வது முறையாக பாஜக வெற்றி? குஜராத்தில் காங்கிரஸை கலங்கடிக்கும் "பட்டேல்" ஜாதி.. கணிப்பு சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2017 சட்டசபை தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்த போது சிறப்பாக செயல்பட்டு இருந்தது. ஆனால் கடந்த முறையை விட இந்த முறை மிக மோசமான தோல்வியை நோக்கி அந்த கட்சி சென்று கொண்டு இருக்கிறது என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பல்வேறு ஊடகங்கள் மேற்கொண்ட கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

 குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள் குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள்

கணிப்பு

கணிப்பு

இரண்டாம் கட்ட தேர்தல் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களில் நடைபெற்றது. ஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக பாஜக 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவி - P-MARQ கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி பாஜக மாபெரும் வெற்றியை பெறும். பாஜக 2017 தேர்தலில் 99 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

குஜராத் எக்சிட் போலின்படி காங்கிரஸ் 30 - 42 இடங்களை பெறும் என்று ரிபப்ளிக் டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்றது. அதில் இருந்து 30க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் இழக்கும். அதாவது காங்கிரசுக்கு இது படுதோல்வி என்று கணிப்பு தெரிவிக்கிறது. மேலும்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 2 - 10 இடங்களை பெறும் என்று இந்த ரிபப்ளிக் டிவி கணிப்பு தெரிவிக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2017 சட்டசபை தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்த போது சிறப்பாக செயல்பட்டு இருந்தது. ஆனால் இந்த முறை அதை விட மோசமான தோல்வியை காங்கிரஸ் பெற்றுள்ளது.

பட்டேல் வாக்குகள்

பட்டேல் வாக்குகள்

பட்டேல் இன வாக்குகள் குஜராத்தில் மீண்டும் பாஜகவிற்கு திரும்பி இருப்பதையும் கணிப்புகள் காட்டுகிறது. அமித் ஷா ஒரு ஜெனரல் டயர்.. பாஜக எனக்கு 1200 கோடி ரூபாய் கொடுத்து இழுக்க பார்க்கிறது என்று கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலின் போது கூறியவர் ஹர்திக் பட்டேல். பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த அதே ஹர்திக் பட்டேல் தற்போது பாஜகவில் ஐக்கியம் ஆனார். ஹர்திக் பட்டேலின் இந்த மூவ் குஜராத் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதை கணிப்புகள் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளன. குஜராத்தில் பட்டிதார் சமூகம் நினைத்தால் தேர்தல் முடிவை மாற்றலாம்

யார் இவர்கள்

யார் இவர்கள்

குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவு இல்லாமல் வெற்றிபெற முடியாது. அதிலும் அங்கு கடந்த 5 முதல்வர்களை பட்டிதார் இனப்பிரிவு மக்களே தேர்வுசெய்துள்ளனர். ஆம்.. பட்டிதார் இன மக்கள்தான் அங்கு தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி. பாஜக குஜராத்தை கோட்டையாக வைத்து இருப்பதும் அப்படித்தான். அங்கு கடந்த 5 முதல்வர்களின் 4 முதல்வர்கள் பட்டிதார் உட்பிரிவான Leuva பட்டேல் இனப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தமாக உள்ள 182 இடங்களில் 60 இடங்களில் வெற்றியை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். இதனால்தான் அங்கு பட்டிதார் தலைவர் ஹர்திக் பட்டேலை பாஜக வளைத்து உள்ளது. ஒரு காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அங்கு பட்டிதார் ஆதரவு காங்கிரஸ் வசம்தான் இருந்தது. 30 வருடங்களுக்கு முன் அங்கு காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் , பட்டிதார் இன மக்களை புறக்கணித்துவிட்டு சாத்திரிய - அரிஜன - முஸ்லீம் - ஆதிவாசி உருவாக்கினார். இதனால் காங்கிரஸ் அங்கு பட்டேல் இன மக்கள் ஆதரவை இழந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு அங்கு பாஜக வளர்ந்து, பட்டிதார் உதவியுடன் தொடர்ந்து ஆட்சியிலும் இருந்து வருகிறது.

பின்னடைவு

பின்னடைவு

கடந்த சட்டசபை தேர்தலில் ஹர்திக் பட்டேல் என்ற பட்டிதார் தலைவர் உதவியுடன் காங்கிரஸ் குஜராத்தில் மீண்டும் எழுச்சி பெற்றது. அங்கு இதனால் காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. கடந்த 2017 சட்டபை தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வென்றது. முதல்முறை பாஜக இரட்டை இலக்கத்திற்கு சுருங்கி போக ஹர்திக் பட்டேல் காங்கிரசை ஆதரித்ததுதான் காரணம், அங்கு பாஜக ஆதரவு குறைய காரணம், அவர்கள் பட்டேல் இனப்பிரிவினர் இடையே ஆதரவை இழந்ததால்தான். ஆனால்தற்போது ஹர்திக் பட்டேல் பாஜகவில் இணைந்துவிட்டார். இதனால் ஹர்திக் பட்டேல் உதவியால் பாஜக வெற்றிபெறுகிறதோ.. காங்கிரஸ் இருந்த இடங்களையும் இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Gujarat election 2022 exit poll results: Are patel vote bank back to BJP? Congress lost the caste fraction?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X