Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்தில் தேர்தல் விதியை மீறிய பிரதமர் மோடி? வரிந்து கட்டி வந்த மம்தா, காங்கிரஸ்..வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி ஓட்டளித்த நிலையில் அவர் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2வது கட்டமாக நேற்று 93 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

இதன்மூலம் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்றுடன் தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மும்முனை போட்டி

மும்முனை போட்டி

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என திட்டமிட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்து தேர்தலை சந்தித்தது. அதேபோல் குஜராத்தில் இழந்த செல்வாக்கை மீட்கும் முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டது. இந்த 2 கட்சிகள் தவிர டெல்லி, பஞ்சாப் தேர்தலில் கிடைத்த வெற்றி களிப்பில் குஜராத்திலும் ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது.

ஓட்டளித்த பிரதமர் மோடி

ஓட்டளித்த பிரதமர் மோடி

குஜராத் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமாகும். தேர்தலில் ஓட்டளிப்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் குஜராத் வந்தார். காந்தி நகரில் உள்ள தனது தாய் ஹீராபென்னை பிரதமர் மோடி சந்தித்து காலில விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இதையடுத்து நேற்று காலையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப் நிஷான் அரசு பள்ளிக்கு சென்று ஓட்டுப்போட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "ஜனநாயக திருவிழாவை குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் ஆணையம் தேர்தலை அமைதியாக நடத்தி வருகிறது. அதற்கும் வாழ்த்துகள்'' என்றார்.

சர்ச்சையில் சிக்கிய மோடி

சர்ச்சையில் சிக்கிய மோடி

இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது பிரதமர் மோடி ஓட்டளிக்க சாலை பேரணிபோல் சென்றார். தேர்தல் சமயத்தில் பொதுக்கூட்டம், பேரணி உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி கிடையாது. இதை செய்தால் தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இந்நிலையில் தான் பிரதமர் மோடி பேரணியாக சென்றது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.

எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

மேலும் தேர்தல் நடத்தை விதியை பிரதமர் மோடி மீறியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு தலைவர் பவன் கேரா கூறுகையில், ‛‛கடந்த சில வாரங்களாக தேர்தல் ஆணையம் செயலற்று உள்ளது. தேர்தலை பொறுத்தமட்டில் பிரதமராக இருந்தாலும், சாமானியனாக இருந்தாலும் ஒரே போல் கருத வேண்டும். பிரதமரின் அத்துமீறலை நடவடிக்கையின்றி தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ள ஏதேனும் நிர்பந்தங்கள் உள்ளனவா?. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்'' என்றார்.

மம்தா பானர்ஜி ஆக்ரோஷம்

மம்தா பானர்ஜி ஆக்ரோஷம்

இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛பிரதமரும், அவரது கட்சியும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். வாக்களிக்கும் நாளில் சாலை பேரணிக்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கப்படாது. ஆனால் பிரதமர் மோடியும் அவரது கட்சியும் விவிஐபிகள். அவர்களால் எதையும் செய்ய முடியும். அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்'' என கோபத்தை வெளிக்காட்டி உள்ளார்.

கருத்து கணிப்பு முடிவுகள்

கருத்து கணிப்பு முடிவுகள்

குஜராத்தில் 2 கட்டங்களாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் நேற்று மாலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் அனைத்து கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு சாதமாக உள்ளது. பாஜக 120க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இந்தியா டூடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பின்படி பாஜக 131-151 இடங்களையும், காங்கிரஸ் 16-30 இடங்களையும், ஆம் ஆத்மி 9-21 இடங்களை வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் கருத்து கணிப்புன்படி குஜராத்தில் பாஜக 128 - 148 இடங்களிலும், காங்கிரஸ் 30 - 42 இடங்களிலும் ஆம் ஆத்மி 2 - 1 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+