குஜராத் சட்டசபை தேர்தல் எப்போது? சஸ்பென்ஸ் வைத்த தேர்தல் ஆணையம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி இன்ற அறிவித்த நிலையில் குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு நிறைவடைய உள்ள நிலையில் சட்டசபை தேர்தல் தேதியை இன்று மத்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Gujarat elections to be held before 18 December: EC

டெல்லியில் மாலை நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.

ஆனால், ஜனவரியில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள குஜராத்துக்கு வரும் திங்கள்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்துவிட்டார். இன்றே குஜராத் தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் என்பதே ஊடகங்களின் கணிப்பாக இருந்தது. அதேநேரம், டிசம்பர் 18ல் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குஜராத் தேர்தலும் அதற்கு முன்பாகவே முடிந்துவிடும் என்பதே பொதுவான கணிப்பாக உள்ளது. இருப்பினும் இணை அறிய வரும் 16ம் தேதிவரை காத்திருக்க வேண்டும்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிகிறது. அங்கு ஆனந்தி பென் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Election dates to HimachalPradesh Assembly polls announced. Schedule for Gujarat to be announced separately.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற