நீளமான முடியால் கின்னஸில் இடம் பிடித்த இந்தியாவின் ‘ராபுன்செல்’
நீளமாக முடி வளர்த்து குஜராத் மாணவி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Recommended Video

அகமதாபாத்: உலகிலேயே மிக நீளமான முடி கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாணவி நிலான்ஷி பட்டேல்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் 16 வயதான நிலான்ஷி பட்டேல் என்ற மாணவி. இவரது கூந்தல் 5 அடி 7 அங்குல நீளம் கொண்டது. கடந்த 10 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் வளர்த்து வந்துள்ளார் நிலான்ஷி.
இவரது கூந்தல் தான் உலகிலேயே நீளமானது என கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. அதற்கான சான்றிதழையும் அது நிலான்ஷிக்கு வழங்கியுள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்:
கடைசியாக தனது 6 வயதில் முடி வெட்டியுள்ளார் நிலான்ஷி. அப்போது முடி திருத்துவோர் செய்த சிகையலங்காரம் அவருக்குப் பிடிக்காமல் போகவே அதன் பிறகு முடியை வெட்ட அவர் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

பராமரிப்பு:
தனது நீளமான முடியை வாரம் ஒருமுறை தாயின் உதவியோடு, சுத்தமாக அலசி பராமரித்து வருவதாகக் கூறுகிறார் நிலான்ஷி. பெரும்பாலும் நீளமான முடியை வைத்திருக்கும் பெண்கள் அதனைப் பராமரிக்க அதிக சிரமப்படுவதாகக் கூறுவர். ஆனால், அப்படி நீளமான முடி தனக்கு எவ்வித பிரச்சினையையும் தரவில்லை என்கிறார் நிலான்ஷி. இது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் அவர் கூறுகிறார்.

சிறப்பு உணவுகள்:
தான் விளையாட செல்லும்போது மற்றும் வேறு வேலைகளின் போது தனது நீளமான முடியை சடையாக பின்னல் போட்டுக் கொள்வது நிலான்ஷியின் வழக்கமாம். மற்றபடி முடிக்கு என அவர் வேறு எந்த சிறப்பு உணவுகளோ அல்லது பழக்கவழக்கங்களோ மேற்கொள்வதில்லையாம்.
நீளக்கூந்தல்:
நீளமான கூந்தல் என்பது பலரது கனவு. ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுவதில்லை. நீள முடியுடன் இருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரமான ராபுன்செல்லை எல்லோருக்குமே பிடிக்கும். இந்தியாவின் ராபுன்செல்லாக குறிப்பிடப்படுகிறார் நிலான்ஷி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications