சுற்றுலாத் தளமாகும் மோடி பிறந்த கிராமம்... "பேக்கேஜ் டூரை" அறிமுகப்படுத்தும் குஜராத் அரசு!
ஆமதாபாத் : குஜராத் அரசின் மாநில சுற்றுலா துறை வளர்ச்சி கழகமும், தனியார் டிராவல்ஸ் நிறுவனமும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த ஊர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பேக்கேஜ் டூரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ரூ. 600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் மெகசானா மாவட்டம் வாத்நகரில் பிறந்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து இன்று இந்தியாவின் பிரதமராக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில், குஜராத் மாநில அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், ஆமதாபாத் நகரைச் சேர்ந்த அக்ஸார் டிராவல்ஸ் பி. லிமிடெட் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து ஒருநாள் பேகேஜ் டூர் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது.

இது குறித்து குஜராத் சுற்றுலாத்துறை கூறியிருப்பதாவது:
குஜராத் மாநிலம்காந்திநகரில் இருந்து துவங்கி ஆமதாபாத் வழியாக வாத்நகர் செல்லும் இந்த பேக்கேஜ் டூர், மெகசானா மாவட்டத்தில் வாத்நகரில் மோடியின் பிறந்த கிராமம் மோடி இளமை காலங்களில் படித்த பள்ளி, அவரது மூதாதையர்களின் இல்லம் மற்றும் மோடி சிறு வயதில் அப்பகுதி ரயில்நிலையத்தில் டீ வியாபாரம் செய்த இடம் ஆகியவற்றினை சுற்றி பார்க்கும் ஒரு நாள் பேக்கேஜ் டூர் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சுற்றுலா பயணி ஒருவருக்கு தலா ரூ.600 வசூலிக்கப்படுகிறது'என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா பேகேஜ் குறித்து அக்ஸார் டிராவல்ஸ் நிறுவன மேலாளர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், ‘கடந்த ஜனவரி மாதம் குஜராத் வந்த நரேந்திர மோடி வைபரன்ட் குஜராத் மாநாடு நடத்தினார். அதில் சுற்றுலாத்துறையை ஈர்க்க புதிய முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி இந்த பேக்கேஜ் டூர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூலம் நரேந்திரமோடி பிறந்த கிராமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications