மாணவர் மரணங்களை தடுக்க.. பலே ஐடியா! குஜராத் பல்கலைக்கழகத்தின் விசித்திர யோசனையை பாருங்க!
காந்திநகர்: 'வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தின்' விடுதிகளில், மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஸ்பிரிங் பொருத்தப்பட்ட சீலின் ஃபேன் மாட்டப்பட்டிருக்கிறது. இது மாணவர்களின் தற்கொலை முயற்சியை தடுக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருக்கிறது.
இந்தியாவில் வேலையிண்மை விகிதம் வெறும் 5% என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால், கள நிலவரம் வேறு! நாடு முழுவதும் சுமார் 80% மக்கள் சுய வேலை செய்பவர்களாகவோ, கூலி தொழிலாளியாகவோதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளமோ, வேலை உத்தரவாதமோ கிடையாது.

சிம்பிளாக சொல்வதெனில் வாரத்தில் சில மணி நேரத்திற்கு வேலை செய்தாலே, நீங்கள் வேலை வாய்ப்பை பெற்றவர் என்று அரசு கணக்கிடுகிறது. யதார்த்தம் இப்படியாக இருக்க.. படித்து முடித்து வெளியேறும் மாணவர்கள் வேலை இல்லாமல், எதிர்காலத்தை நினைத்து மிகப்பெரிய பயத்துடன் வாழ்கிறார்கள். படிக்கும்போதே இந்த அச்சம் தொடங்கிவிடுகிறது.
நுழைவு தேர்வுகள், பொதுத்தேர்வில் பாஸ் செய்தாலும் மருத்துவம் படிக்க தனி நுழைவுத்தேர்வு, படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இல்லாமல், கல்வி பற்றிய அச்சத்தை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறைகள்.. என மாணவர்கள் கால் வைக்கும் இடமெல்லாம் அரசு கன்னி வெடியை வைத்திருக்கிறது. இதுதான் மாணவர்களின் தற்கொலைக்கு முதன்மை காரணமாக இருக்கிறது.
உண்மை நிலவரம் இப்படியாக இருக்கையில், மாணவர் விடுதிகளில் ஸ்பிரிங் பொருத்தப்பட்ட சீலிங் ஃபேனை மாட்டி தற்கொலையை தடுக்கிறோம் என்று அரசு கூறுவது அபத்தமாக இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
🚨 A university in Gujarat is installing spring-loaded "anti-suicide" fans across its hostels. https://t.co/tXCm8voFHF
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 23, 2026
'வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தின்' விடுதிகளில், மொத்தம் 354 ஸ்பிரிங் பொருத்தப்பட்ட சீலிங் ஃபேன் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 10 கிலோ கிராம் எடையை மட்டுமே இந்த ஃபேன்கள் தாங்கும். ஒருவேளை மாணவர்கள் தூக்கில் தொங்க முயன்றால், உடனே ஸ்பிரிங் ரிலீஸாகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு பேன் கீழே வந்துவிடும். மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதை இது தடுக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வாய்கூசாமல் கூறுகிறது.
பாதுகாப்பான, நம்பிக்கையான சூழலை உருவாக்குவதன் மூலம் மட்டுமே மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க முடியும். அதைதான் கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும். இதுபோன்ற கிரிஞ்ச் செயல்களை அல்ல.. என்று கல்வியாளர்கள் காட்டமாக விமர்சித்திருக்கிறார்கள்.
'மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணங்களோ ஏற்பட்டால்.. தமிழக அரசின் ஹெல்ப்லைன் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றை தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைகளை பெறலாம்.'


Click it and Unblock the Notifications
