For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில்.. என்னதான் திடீரென புயலாக வீசினாலும்.. 141 தொகுதிகளில் டெபாசிட் இழந்த ஆம் ஆத்மி

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் பாஜக கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி படு தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி 128 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. காங்கிரஸ் 41 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.

இந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

போனை எல்லாம் வச்சுட்டு வாங்க! ஆர்டர் போட்ட அண்ணாமலை.. நாக்பூர் வரை போன புகார்.. கமலாலய யுத்தம்! போனை எல்லாம் வச்சுட்டு வாங்க! ஆர்டர் போட்ட அண்ணாமலை.. நாக்பூர் வரை போன புகார்.. கமலாலய யுத்தம்!

பாஜக வரலாற்று வெற்றி

பாஜக வரலாற்று வெற்றி

கடந்த 2017- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 99 தொகுதிகளில் வென்றிருந்த பாஜக இந்த முறை 156 இடங்களில் வென்று வரலாற்று சாதனை படத்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு தேர்தலின் போது நரேந்திர மோடி தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட போது 127 இடங்களில் பாஜக வென்று இருந்தது. இதுவே பாஜகவின் சிறந்த வெற்றியாக இருந்த நிலையில், தற்போது புதிய சாதனையை பாஜக பூபேந்திர படேல் தலைமையில் நிகழ்த்தியுள்ளது.

ஆம் ஆத்மிக்கு பலத்த அடி

ஆம் ஆத்மிக்கு பலத்த அடி

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 15 மாதங்களே உள்ளதால், பாஜகவின் இந்த இமாலய வெற்றி பாஜகவிற்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 1995, 1998, 2002, 2007, 2012, 2017,2022 என தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. பாஜக இப்படி குஜராத்தில் சாதனை மேல் சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் நிலையில், பெருங் கனவோடு குஜராத்தில் களம் இறங்கிய ஆம் ஆத்மி பல தொகுதிகளில் பலத்த அடியை வாங்கியுள்ளது. 181 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி 128 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.

கோபால் இடாலியாவும் படுதோல்வி

கோபால் இடாலியாவும் படுதோல்வி

இதில், ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வராக களம் இறக்கப்பட்ட இசுதான் காத்வியும் டெபாசிட்டை பறிகொடுத்த ஆம் ஆத்மி வேட்பாளர்களில் ஒருவர் ஆவார். இவரைத்தவிர குஜராத் ஆம் ஆத்மியின் தலைவர் கோபால் இடாலியாவும் படுதோல்வியை சந்தித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியும் இதற்கு சற்றும் சளைக்காமல் படு தோல்வியை சந்தித்து உள்ளது என்றே சொல்லலாம். கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு கடும் சவால் கொடுத்தது. 76 தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது.

திருப்திகரமான வாக்குகள்

திருப்திகரமான வாக்குகள்

ஆனால், இந்த முறை வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி மண்ணைக் கவ்வியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 41 பேர் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி 128 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தாலும் முதல் முறையாக குஜராத்தில் போட்டியிட்டு திருப்தி அளிக்கும் வகையிலான வாக்குகளை பெற்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி

5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி

இது தொடர்பாக குஜராத் ஆம் ஆத்மியின் தலைவர் கோபால் இடாலியா கூறுகையில், ''இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் செயல்பாடு மோசமானது இல்லை. கிட்டத்தட்ட 13 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுளது.ஆம் ஆத்மி பல தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு நேரடியாக சவால் விடுத்தது. மாநிலம் முழுவதும் பாஜக 40 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது" என்றார். குஜராத்தில் 181 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

English summary
Gujarat has proved once again that it is a BJP stronghold. Opposition parties Congress and Aam Aadmi Party have been defeated. AAP has lost deposits in 128 constituencies. Congress has lost deposits in 41 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X