For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதெல்லாம் பிடிக்காது.. மீறி செய்தால் தலையை சீவிவிடுவேன்.. கோடாரியுடன் மிரட்டிய ஹரியாணா முதல்வர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Haryana CM Manohar lal khattar threaten his supporters

    சண்டீகர்: கிரீடம் வைப்பது எனக்கு பிடிக்காது. அப்படியே தலையை சீவிவிடுவேன் என ஆதரவாளர்களிடம் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் கோபத்தில் பொங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹரியானாவில் ஜன் ஆசிர்வாத் யாத்ரா என்ற திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மனோகர் லால் கட்டர் மினி லாரியில் மக்கள், தொண்டர்கள் முன் பேசினார்.

    ஆர்எஸ்எஸ் பின்னணியா.. புதுமுகமா.. யார்தான் அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக?ஆர்எஸ்எஸ் பின்னணியா.. புதுமுகமா.. யார்தான் அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக?

    வெள்ளி கிரீடம்

    வெள்ளி கிரீடம்

    அப்போது அவருக்கு கோடாரி பரிசாக வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொண்டு அவர் பேசி கொண்டிருந்தார். உடனிருந்த கட்சி நிர்வாகி ஒருவர் கட்டரின் தலையில் வெள்ளி கிரீடத்தை வைக்க முயன்றார்.

    கிரீடம்

    கிரீடம்

    இதனால் கடுங்கோபமடைந்த மனோகர்லால் கட்டர், கையில் கோடாரியை காட்டி அப்படியே தலையை சீவிவிடுவேன் என கத்தினார். அவர் கூறுகையில் என்னுடைய கட்சித் தொண்டராகவே இருந்தாலும் என் தலையில் கிரீடம் வைப்பது எனக்கு பிடிக்காது.

    காங்கிரஸ் தலைமை

    காங்கிரஸ் தலைமை

    அந்த கலாசாரம் காங்கிரஸ் இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் முடிந்துவிட்டது என்றார். எனினும் தொண்டர்கள் மத்தியில் பொதுமக்கள் மத்தியில் பொறுமையை இழந்து கட்டர் நடந்து கொண்ட விதம் குறித்த வீடியோ காங்கிரஸ் தலைமைக்கு சென்றது.

    பொதுமக்கள் கேள்வி

    இந்த வீடியோவை டேக் செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, எதற்காக இத்தனை கோபம். கோபமும், பிடிவாதமும் உடலுக்கு நல்லதல்ல. தொண்டர்களிடையேயே தலையை சீவுவேன் என கூறும் இவர், பொதுமக்களிடம் என்ன செய்வார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Haryana CM Manohar Lal Khattar says that I will Chop your head off while his supporter put crown on his head.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X