For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி.. துஷ்யந்த்தான் அடுத்த ஹரியானா சிஎம்.. காங்கிரஸ் மாஸ் திட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Haryana Election Results 2019 | காங்கிரஸ் கட்சியிடம் முதல்வர் பதவி கேட்ட துஷ்யந்த் சவுதாலா-வீடியோ!

    சண்டிகர்: ஹரியானாவில் ஜன்நாயக் ஜனதா பார்ட்டி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாதான் அடுத்த ஹரியானா முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மூத்த தலைவர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார்.

    ஹரியானா தேர்தல் முடிவுகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே நெக் டு நெக் போட்டி நிலவி வருகிறது. இதனால் மூன்றாவது கட்சியான ஜன்நாயக் ஜனதா பார்ட்டி கிங் மேக்கராக மாறியுள்ளது.

    ஹரியானா சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 30 தொகுதிகளில் முன்னிலை. 12 இடங்களில் ஜேஜேபி எனப்படும் ஜன்நாயக் ஜனதா பார்ட்டி முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை.

    தொடங்கி 1 வருடம் கூட ஆகவில்லை.. 319 நாளில் கிங் மேக்கராகும் ஜேஜேபி.. ஹரியானா அரசியலில் பரபரப்பு!தொடங்கி 1 வருடம் கூட ஆகவில்லை.. 319 நாளில் கிங் மேக்கராகும் ஜேஜேபி.. ஹரியானா அரசியலில் பரபரப்பு!

    தலைவர்

    தலைவர்

    இந்த நிலையில் ஜன்நாயக் ஜனதா பார்ட்டி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா காங்கிரஸ் கட்சியிடம் முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டுள்ளார், மேலும் ஹரியானாவில் ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்றால், முதல்வர் பதவி வேண்டும் என்று ஜன்நாயக் ஜனதா பார்ட்டி கூறியுள்ளது என்று தகவல்கள் வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் ஜன்நாயக் ஜனதா பார்ட்டி ஆலோசனை நடத்த உள்ளது.

    கர்நாடகா எப்படி

    கர்நாடகா எப்படி

    காங்கிரஸ் கட்சி இதற்காக கர்நாடக பார்முலாவை பின்பற்ற முடிவு செய்துள்ளது என்று கூறுகிறார்கள். கர்நாடகாவில் இதேபோல்தான் மஜதவின் தலைவர் குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை விட்டு கொடுத்தது. ஹரியானாவில் அதேபோல் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    பதவி

    பதவி

    ஆகவே ஜன்நாயக் ஜனதா பார்ட்டி கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க கூட காங்கிரஸ் கட்சியும் தயாராகி உள்ளது. ஹரியானாவில் பாஜகவை ஆட்சியை பிடிக்க விடாமல் செய்ய ஜன்நாயக் ஜனதா பார்ட்டியுடன் இணைய காங்கிரஸ் முடிவு செய்துது.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இது தொடார்பாக காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மாநில மூத்த தலைவர் அசோக் தன்வார் அளித்த பேட்டியில், ஜேஜேபி கட்சிக்குத்தான் முதல்வர் பதவியை கொடுக்க வேண்டும், அதுதான் சரியாக இருக்கும். காங்கிரசை ஆதரிப்பதா, பாஜகவை ஆதரிப்பதா என்பது துஷ்யந்த் முடிவு.

    தம்பி மாதிரி

    தம்பி மாதிரி

    துஷ்யந்த் எனக்கு தம்பி மாதிரி. காங்கிரஸ் கட்சிக்கும் ஜேஜேபி கட்சிக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது, இது வெறும் கொடுக்கல் வாங்கல் உறவு கிடையாது. ஹரியானாவிற்கு அவரைப் போல இளைஞர்கள் ஆட்சி செய்ய வர வேண்டும், என்று காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மாநில தலைவர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார்.

    English summary
    Haryana election results: JJP Dushyant may ask for CM post from Congress to form the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X