ஃபிரண்ட்ஸ் படத்தில் வருவது போல மும்பையில் தப்பி ஓடிய தஷ்வந்த்.. பரபர வீடியோ ரிலீஸ்!
கொடூர கொலையாளி தஷ்வந்த் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர்.
Recommended Video

மும்பை: மும்பை ஹோட்டலில் இருந்து போலீசாரை தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பியோடிய காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதை சேகரித்த குன்றத்தூர் போலீசார், தற்போது அதை வெளியிட்டுள்ளனர்.
சிறுமி ஹாசினியை கொன்று விட்டு சிறைக்குப் போய் ஜாமீனில் வந்த தஷ்வந்த் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தாயை கொடூரமாக கொன்று விட்டு தப்பினார்.
குன்றத்தூர் போலீசார் 3 தனிப்படை அமைத்து அவரை தேடினர். மும்பை செம்பூர் பகுதியில் உள்ள உல்லாச அழகிகள் விடுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை சென்ற போலீசார், தஷ்வந்தை கைது செய்தனர்.

விமான நிலையத்தில் போலீஸ்
தஷ்வந்தை இரவோடு இரவாக விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர மும்பை விமான நிலையம் அழைத்து சென்றனர். விமானத்தில் ஏற மறுத்த தஷ்வந்த் திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். தனிப்படை போலீசாரை அடையாளம் தெரியாமல் வாலிபர் ஒருவரை சிலர் கடத்த முயற்சிப்பதாக மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஹோட்டலில் தங்கிய போலீஸ்
அங்கு வந்த மும்பை போலீசாரிடம் நடந்த விவரத்தை தனிப்படையினர் விளக்கினர். தொடர்ந்து மறுநாள் காலை அவரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னை அழைத்து வர முடிவு செய்தனர். இதற்காக, மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தஷ்வந்துடன் போலீசார் தங்கினர்.

தாக்கிவிட்டு தப்பிய கொலையாளி
திடீரென குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் உள்ளிட்ட காவலர்களை தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். போலீசார் போராடியும் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மும்பை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து குன்றத்தூர் போலீசாருடன் இணைந்து தஷ்வந்தை வலைவீசி தேடினர்.

தப்பி ஓடும் தஷ்வந்த்
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தஷ்வந்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தஷ்வந்த் தாக்கிவிட்டு தப்பிய சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் தஷ்வந்த் தப்பி ஓடுவதும், தனிப்படை போலீசார் விரட்டிக்கொண்டு ஓடுவதும் பதிவாகியுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications