For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் ராம்தேவ்- மறுவிசாரணை நடத்த கோர்ட் உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

நைனிடால்: முத்திரைத்தாள் மோசடி வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் மீதான புகார் குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரித்வார் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட முத்திரைத் தாள் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக அம்மாநில வருவாய்த்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவற்றில், யோகா குருவான ராம் தேவ், பதஞ்சலி யோக பீட அறக்கட்டளைக்கு கடந்த ஆண்டு வாங்கிய நிலத்திலும் முத்திரைத்தாள் மோசடி நிகழ்ந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ramdev

ஆனால் அப்போதைய நில மதிப்பின்படியே முத்திரைத்தாள் கொடுக்கப்பட்டதாகவும், முத்திரைத்தாள் ஏய்ப்பு நடைபெறவில்லை என்றும் ராம்தேவ் தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. இதற்கான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ராம்தேவின் பதஞ்சலி குழுமம் சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து, ராம்தேவுக்கு எதிரான வருவாய் ஆட்சியரின் அறிக்கையை தள்ளுபடி செய்த அம்மாநில உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மறு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

English summary
Uttarakhand High Court has quashed the order of State Revenue Board on alleged stamp duty evasion by yoga guru Ramdev's Patanjali Ayurved Ltd based in Haridwar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X