For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு.. காவிரியில் வரப்போகிறது கூடுதல் தண்ணீர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: குடகு, மைசூர், மண்டியா மற்றும் ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிித்துள்ளது.

ஹாரங்கி, கபினி, கேஆர்எஸ் மற்றும் ஹேமாவதி ஆகிய காவிரி அணைக்கட்டுகள் அனைத்துமே இந்த மாவட்டங்களில்தான் அமைந்துள்ளன. எனவே இந்த மழை காரணமாக ஏற்கனவே ஏறத்தாழ நிரம்பிவிட்ட, இந்த அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Heavy rain expected in Cauvery catchment area

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் 90 அடியை தண்ணீர் மட்டம் தாண்டிவிட்டது. எனவே வரும் 19ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

எஞ்சிய நீரை தமிழகம் எவ்வாறு பயன்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

English summary
The Mysuru, Kodagu, Mandya, and Hassan district administrations are on alert given the incessant rains in the Cauvery catchment area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X