மூளையில் கட்டி, நுரையீரல் கோளாறு: உயிருக்கு போராடும் 6 வயது மகனை காப்பாற்ற போராடும் தந்தை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் 6 வயது மகனின் உயிரை காப்பாற்றுமாறு நல்லுள்ளங்களிடம் மன்றாடுகிறார் தந்தை ஒருவர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லியை சேர்ந்தவர் விக்ரம் சிங். அவரின் மகன் ஆனந்த்(6). 2014ம் ஆண்டு ஆனந்துக்கு 'Recurrent Anaplastic Brainstem Ependymoma' என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Helpless Father Struggling To Save Son With Brain Tumour & Failed Lungs

ஆனந்த் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக உள்ளார். உணவு டியூப் மூலம் செலுத்தப்படுகிறது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனந்துக்கு ரேடியோதெரபி செய்ய ரூ. 7 லட்சம் தேவைப்படுகிறது. மாதம் ரூ. 15 ஆயிரம் சம்பளம் வாங்கிய விக்ரம் ஆனந்த் நோய்வாய்பட்டதும் வேலையை விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே உள்ளார்.

Helpless Father Struggling To Save Son With Brain Tumour & Failed Lungs

சிகிச்சைக்காக இதுவரை ரூ. 11 லட்சம் செலவு செய்துள்ளார் விக்ரம். ஆனந்துக்கு இன்னும் 9 மாதங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு தயாள குணமுள்ளவர்கள் உதவி செய்யுமாறு மன்றாடுகிறார் விக்ரம்.

முன்னதாக 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆனந்துக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்தபோது அவரின் மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனே ரூ. 6 லட்சம் ஏற்பாடு செய்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆனந்துக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு ஆனந்த் எந்த பிரச்சனையும் இன்றி 3 ஆண்டுகள் இருந்துள்ளார்.

Helpless Father Struggling To Save Son With Brain Tumour & Failed Lungs

பின்னர் கடந்த டிசம்பர் மாதம் ஆனந்தின் மூளையில் மீண்டும் கட்டி வந்ததுடன் புற்றுநோயும் மீண்டும் வந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கீமோதெரபியால் ஆனந்தின் நுரையீரல் செயல் இழந்துவிட்டது.

ஆனந்தின் சிகிச்சைக்கு வாரம் ரூ. 2 லட்சம் வரை தேவைப்படுகிறது. ஆனந்துக்கு உதவி விரும்புவோர் கெட்டோ மூலம் உதவி செய்யலாம்.

English summary
My 6-year-old son Anand has been in the hospital kilometres away from home, since the last 210 days. Anand was diagnosed with a condition called ‘Recurrent Anaplastic Brainstem Ependymoma’ in 2014. Since his diagnosis, his brain has shown presence of tumours three times, shattering our world every single time, said a young father.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற