For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிமாச்சல் பிரதேசம்: பாஜகவில் கலகக் குரல்- கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் மாநில துணைத் தலைவர்!

Google Oneindia Tamil News

சிம்லா: ஹிமாச்சல் பிரதேச பாரதிய ஜனதா கட்சியில்(பா.ஜ.க.) அதிருப்தி குரல் பகிரங்கமாக வெடித்துள்ளது. ஹிமாச்சல் பிரதேச பாஜகவின் மாநில துணைத் தலைவர் கிரிபால் பார்மர் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் பாஜகவின் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் என்கின்றன தகவல்கள்.

அண்மையில் நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 3 லோக்சபா தொகுதிகள், 29 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பாஜக தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் வென்றது.

அதேபோல ஹிமாச்சல் பிரதேசத்தின் பதேபுர், அர்க்கி, ஜூப்பாய் சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்து அதிர்ச்சி தந்தது. ஜூப்பாய் தொகுதியில் பாஜக வேட்பாளர் டெபாசிட்டையே இழந்தார்.

ஜெய் பீம்: விடுங்க.. இந்த 2 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! காடுவெட்டி குரு மகன் கனலரசன் ஆவேசம் ஜெய் பீம்: விடுங்க.. இந்த 2 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! காடுவெட்டி குரு மகன் கனலரசன் ஆவேசம்

முதல்வருக்கு எதிர்ப்பு

முதல்வருக்கு எதிர்ப்பு

இதனால் அப்போதே முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மாற்றப்படுவார் என கூறப்பட்டது. இத்தனைக்கும் முதல்வர் தாக்கூரின் சொந்த ஊர் மண்டி தொகுதியில்தான் வருகிறது. ஹிமாச்சல பிரதேசத்துக்கு அடுத்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதை அக்கட்சி மேலிடத்தால் ஜீரணிக்க முடியவில்லை.

பாஜக துணைத் தலைவர் ராஜினாமா

பாஜக துணைத் தலைவர் ராஜினாமா


இதனைத் தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேச மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநில பாஜக துணைத் தலைவர் கிரிபால் பார்மர் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு மிக நெருக்கமான தலைவர் கிரிபார் பர்மா. ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தவர்.

அடுத்தடுத்து ராஜினாமா?

அடுத்தடுத்து ராஜினாமா?

பதேபுர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் கிரிபால். ஆனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த கிரிபால் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநில பாஜக தலைமை சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். கிரிபாலைத் தொடர்ந்து மேலும் நிர்வாகிகள் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

முதல்வர் மாற்றமா?

முதல்வர் மாற்றமா?

அத்துடன் வரும் 26-ந் தேதி நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மாற்றப்படுவதற்கான சாத்தியங்களும் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா மாநிலங்களில் மாநில முதல்வர்களை பாஜக மாற்றியது. தற்போது இந்த வரிசையில் ஹிமாச்சல் பிரதேச மாநிலமும் இணையக் கூடும் என்றே தெரிகிறது.

English summary
Himachal BJP vice president Kripal Parmar has resigned from the party post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X