அடுத்த மாசம்தானே கல்யாணம்! பாராசூட்டில் வந்த "எமன்".. 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து.. பரிதாபம்
சிம்லா: அடுத்த மாதம் திருமணத்தை வைத்துக் கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் பாராசூட்டில் சாகசப் பயணம் மேற்கொண்ட இளைஞர், 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பாராகிளைடிங் சாகச விளையாட்டில் பலர் உயிரிழந்து வரும் நிலையில், இந்த சம்பவம் சாகச விரும்பிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, இமாச்சலப் பிரதேசத்தில் பாராகிளைடிங் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் கூட, இந்த சாகசம் அங்கு தொடர்வது அரசின் அலட்சியப் போக்கையே காட்டுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் திருமணம்
மகாராஷ்ட்ரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜ் சஞ்சய் ஷா (30). ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சமயமாகியுள்ளது. அவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சஞ்சயின் நண்பர்கள் சேர்ந்து 'டூர்' செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.

இமாச்சலுக்கு 'டூர்'
முதலில் கோவாவுக்கு சுற்றுலா செல்ல நண்பர்கள் முடிவெடுத்த நிலையில், கடைசியில் இமாச்சலப் பிரதேத்துக்கு அவர்கள் செல்ல முடிவெடுத்தனர். அதன்படி, மூன்று தினங்களுக்கு முன்பு இமாச்சல் வந்த அவர்கள் சிம்லா, மணாலி ஆகிய இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். பின்னர், நேற்று காலை அவர்கள் குலு மாவட்டத்துக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கடைசியாக டோபி பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

எமனாக மாறிய 'பாராகிளைடிங்'
அப்போது அங்கு பாராகிளைடிங் சாகச விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. பாராசூட்டில் தொங்கியபடி செல்லும் இந்த ஆபத்தான விளையாட்டில், சஞ்சயின் நண்பர்கள் யாரும் ஈடுபட முன்வரவில்லை. ஆனால், சஞ்சய் மட்டும் பாராகிளைடிங்கில் செல்ல முன்வந்தார். அதன்படி, பாராசூட்டில் அவரும், அதை ஓட்டுபவரும் பறந்து சென்றனர். 20, 50 அடி என கடைசியாக 500 அடி உயரத்தில் பாராசூட் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென அவரது தோள் பட்டையில் கட்டப்பட்டிருந்த கம்பி அறுந்தது.

உயிரிழப்பும்.. குற்றச்சாட்டும்..
இதில், 500 அடி உயரத்தில் இருந்து கீழே இருந்த பயங்கர பள்ளத்தாக்கில் சஞ்சய் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும், இந்த சம்பவத்தில் பாராசூட்டை ஓட்டிச் சென்றவர் சாதுர்யமாக செயல்பட்டு உயிர் தப்பினார். இமாச்சலப் பிரதேசத்தில் பாரா கிளைடிங் விளையாட்டுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு தடைவிதித்தது. இருந்தபோதிலும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கு பாராகிளைடிங் விளையாட்டு நடைபெறுவதே இதுபோன்ற அகால மரணங்களுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications