'இதுதான் இந்தியா'.. 50 ஆண்டுகளாக மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்.. மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சி
கொல்கத்தா: சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள், பல்வேறு மத குழுக்களிடையே மோதல்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத பதற்றம் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேட்க நேரிடுகிறது.
ஆனால் மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து குடும்பம் 'நம்மிடையே சாதி மத வேறுபாடு இருக்க கூடாது; என்பதுபோல் மகத்தான காரியம் ஒன்றை செய்து வருகிறார். அதனை பற்றி இப்போது காண்போம்.

பாகிஸ்தானில் இருந்து வந்தனர்
1964-ம் ஆண்டு அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் குல்னா பகுதியில் இருந்து கலவரம் காரணமாக ஈஸ்வர் நிரோத் போஸ் என்பவர் தமது குடும்பத்தினருடன் மேற்கு வங்க மாநிலம் பராசத் பகுதிக்கு குடியேற வந்தார். இதனை தொடர்ந்து குல்னாவில் உள்ள தங்கள் இடத்திற்கு பதிலாக பராசத்தில் இருந்த கியாசுதீன் மொரோல் என்பவரது நிலத்தை ஈஸ்வர் போஸ் சட்டப்படி இடமாற்றம் செய்து கொண்டுள்ளார்.

50 ஆண்டுகளாக மசூதி பராமரிப்பு
அந்த நிலத்தில் ஒரு சிறிய மசூதி இருப்பதை கண்டார். 'இந்த மசூதியை நான் பராமரித்து நடத்த விரும்புகிறேன்' என்று கியாசுதீன் மொரோலிடம், ஈஸ்வர் போஸ் கூறியுள்ளார். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 50 ஆண்டுகளாக அந்த மசூதியை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் , ஈஸ்வர் போஸின் குடும்பத்தினர்.

எங்களின் வாரிசுகள் தொடர்ந்து செய்வார்கள்
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஈஸ்வர் போஸின் மகன் 74 வயதான தீபக் போஸ், 'எனக்கு 14 வயது, நாங்கள் பாகிஸ்தானில் தொடர்ச்சியான கலவரங்களுக்குப் பிறகு, பராசத்திற்கு வந்தபோது, சட்டப்படி, குல்னாவில் உள்ள கியாசுதீன் மோரோல் என்ற நில உரிமையாளருடன் சதுர அடிக்கு அந்த நிலத்தை மாற்றிக் கொண்டோம். அங்கு இருந்த மசூதியை நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின்பேரில் பராமரித்து வருகிறோம். இன்னும் பல தலைமுறைகள் சென்றாலும் எங்களின் வாரிசுகள் இந்த மசூதியை பராமரிக்கும்' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

மதத்தால் மோதிக்கொள்ளும் ஒருசில மனிதர்களுக்கு...
ஈஸ்வர் போஸின் குடும்பத்துக்கு மேற்கு வங்க மட்டுமில்லாது, இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. ''இது சமூக நல்லிணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு' 'மதத்தால் மோதிக்கொள்ளும் ஒருசில மனிதர்களுக்கு இதுதான் இந்தியா'' என்று ஈஸ்வர் போஸின் சுட்டிகாட்டுவதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications