இந்தியா வந்த மேஜிக் மன்னன் டைனமோ கையில் ‘தமிழ்’ நியூஸ் பேப்பர்...

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட உடை, கையில் மந்திரக் கோல், வசீகரப் பேச்சு என மேஜிக் மன்னர்கள் குறித்து நாம் கண்டும், கேட்டும் உள்ளவர்களின் உருவம் பெரும்பாலும் இப்படித் தான் இருக்கும். ஆனால், இவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறார் டைனமோ.

ஒல்லியான உருவத்துடன் சாதாரண உடையில், பிரத்யேக மேடைகள் எதுவும் இல்லாமல் மக்களோடு மக்களாக இவர் நிகழ்த்தும் மேஜிக்குகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

தேம்ஸ் நதி மீது நடப்பது, வாய் குறுகிய பாட்டிலுக்குள் செல்போனை வைப்பது, ஓடி வரும் நீரை அப்படியே பனிக்கட்டியாக மாற்றுவது, கட்டிடங்களின் பக்கவாட்டில் ஹாயாக ஏறுவது, அந்தரத்தில் நிற்பது என பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் உறைய வைப்பது தான் டைனமோவின் ஸ்டைல்.

 இயற்பெயர்...

இயற்பெயர்...

இங்கிலாந்தைச் சேர்ந்த 32 வயதான டைனமோவின் இயற்பெயர் ஸ்டீவன் ஃப்ரேன். சிறு வயது முதலே வயிற்றுவலியால் அவதிப் பட்ட டைனமோ, சிந்தனையை திசை திருப்ப தனது தாத்தா மூலம் மேஜீக் கற்றிருக்கிறார்.

 வீதி மேஜிக்...

வீதி மேஜிக்...

ஆரம்ப காலத்தில் மேடைகளில் மேஜிக் செய்து கொண்டிருந்த டைனமோ, டிவி நிகழ்ச்சிகளுக்காக உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களோடு மக்களாக வீதியில் மேஜீக் செய்யத் தொடங்கினார்.

 இந்தியா வருகை...

இந்தியா வருகை...

அப்படித்தான் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் டைனமோ. அப்போது, மும்பை வீதிகள், குடியிருப்புப் பகுதிகள் என டைனமோ செய்த வித்தைகளைப் பார்த்து பார்வையாளர்கள் வாயடைத்துப் போனார்கள்.

 துண்டுக் காகித மேஜிக்...

துண்டுக் காகித மேஜிக்...

அதில், ஒரு வீடியோவில் மும்பையின் தாராவி பகுதியில் நான்கு இளம் வயது பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் டைனமோ. அப்போது அவர்களுக்கு ஒரு மேஜீக் செய்து காட்டுவதாகக் கூறி அருகில் உள்ள சில துண்டுக் காகிதங்களைக் கையில் எடுக்கிறார்.

 நியூஸ் பேப்பர் ஆனது...

நியூஸ் பேப்பர் ஆனது...

பின்னர் அவற்றை தனது மேஜிக் மூலம் ஒன்றாக ஒட்ட வைக்கிறார். இப்போது அவை ஒரு நியூஸ் பேப்பர் போன்ற வடிவத்தில் உள்ளன. ஆனால், அவற்றில் ஒட்டு போட்டது போன்று பேப்பர் துண்டுகள் ஒட்டப் பட்டுள்ளன.

 அட... தமிழ் பேப்பர் !

அட... தமிழ் பேப்பர் !

பின் மீண்டும் அவற்றை அப்படியும், இப்படியும் சுற்றுகிறார். இப்போது அவர் கையில் அழகிய நியூஸ் பேப்பர் ஒன்று உள்ளது. நன்றாக உற்றுப் பார்த்தால், அட அது ஒரு தமிழ் நியூஸ் பேப்பரின் மும்பைப் பதிப்பு. இந்த மேஜீக்கைப் பார்த்து அப்பெண்கள் வியப்பில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

 டைனமோவின் ரசிகர்கள்...

டைனமோவின் ரசிகர்கள்...

வில் ஸ்மித், ரஸ்ஸல் பிராண்ட், ரிச்சர்ட் பிரான்சன், லிண்ட்சே லோஹன், இளவரசர் சார்லஸ், டேவிட் பெக்ஹாம் என டைனமோவில் ரசிகர்கள் பட்டியலில் உள்ள பிரபலங்கள் பெயரை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 ரகசியங்கள்...

ரகசியங்கள்...

தனது மேஜீக்குகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் டைனமோ கூறியிருப்பதாவது:-

"நான் செய்யும் தந்திரங்கள் சாதாரணமானவைதான். அதை விளக்க ஆரம்பித்தால், ஒரு நிமிடம் கூட உங்களால் கேட்க முடியாது. மேஜிக்கை ரசியுங்கள்; அதற்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்!

 மேஜிக் தான் எதிர்காலம்...

மேஜிக் தான் எதிர்காலம்...

எல்லோருக்கும் இனிமையான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. எனக்கும் குழந்தைப் பருவம் அப்படித்தான் இருந்தது. ஆனால் எனக்குக் கிடைத்த மேஜிக் என்ற வாய்ப்பை நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அதுதான் என் எதிர்காலம் என்று தீர்மானித்துக்கொண்டேன். பிறகு, அதில் வெற்றி பெற நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தேன்.

 அசாத்திய காரியங்கள் இல்லை...

அசாத்திய காரியங்கள் இல்லை...

மற்றவர்களைவிட எந்த விதத்தில் என்னை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கலாம் என்று யோசித்தேன். அவ்வளவுதான்! மற்றபடி நான் அசாத்தியமான காரியங்கள் செய்வதாக எப்பொழுதும் நினைத்ததில்லை.

 வெற்றி ரகசியம்...

வெற்றி ரகசியம்...

உழைப்பும் திறமையும் முயற்சியும் இருந்தால் யாரும் எந்தத் துறையிலும் உச்சத்தை அடைய முடியும்! இந்தச் சாதாரண ஸ்டீவன், டைனமோவாக மாறியது இப்படித்தான்!'' என தனது வெற்றி ரகசியம் சொல்கிறார் டைனமோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+