தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சி நடத்த முடியாது.. கடிவாளம் போடும் சுப்ரீம் கோர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு

  டெல்லி: தண்டனை பெற்ற கைதிகள் தேர்தலில் போட்டியிட முடியாதது போல அரசியல் கட்சிகளை நடத்துவதற்கும் உச்சநீதிமன்றம் விரைவில் தடை விதிக்க உள்ளது.

  உச்சநீதிமன்றத்தில் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா ஒரு பொதுநலன் வழக்கை தொடர்ந்தார். அதில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

  How can a convicted person chose who people should vote for: SC

  இதை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், தண்டனை பெற்ற கைதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியான நிலையில் ஒரு அரசியல் கட்சியை எப்படி நடத்த முடியும்?

  தண்டனை பெற்ற கைதியால் நேரடியாக தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் ஏஜெண்டுகளாக வேட்பாளர்களை தேர்வு செய்து போட்டியிடுவதை எப்படி அனுமதிப்பது? என கேள்வி எழுப்பியுள்ளது.

  மேலும் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்துவது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது என்பது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது. இத்தகைய நபர்கள் ஒரு அரசியல் கட்சியை நடத்துவது என்பது ஜனநாயக மாண்புகளுக்கும் எதிரானது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Supreme Court questioned the logic behind having a criminal or a corrupt person heading a political party while adding that such a lapse is a blow to the purity of the election process.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற