"அம்மா..".. தாய் ஹீராபென் இறந்ததும் மோடிக்கு போன தகவல்.. அதிகாலை 3.30க்கு.. நடந்தது என்ன? பின்னணி!
காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மரணம் அடைந்த நிலையில் பிரதமர் மோடி தனது பயண திட்டங்களை தள்ளிவைத்துவிட்டு குஜராத் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடி மீது மிகவும் அன்பானவர். குஜராத்திற்கு தேர்தல் நேரங்களிலும், பிரச்சாரத்தின் போதும் செல்லும் மோடி தவறாமல் ஹீராபென் மோடியை சந்தித்தார்.
தனது பிறந்த நாளின் போதும், தனது தாயாரின் பிறந்த நாளின் போதும், அன்னையர் தினத்தின் போதும் ஹீராபென் மோடியை பிரதமர் மோடி தவறாமல் சந்திப்பது வழக்கம்.

மோடி
இவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், போட்டோக்கள், வீடியோக்கள் கூட அடிக்கடி வெளியாகும். பெரிதாக குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமாக இல்லாத பிரதமர் மோடி தனது தாயாருடன் மட்டும் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் 99 வயதான ஹீராபென் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். வயோதிகம் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் கூட ஹீராபென்னை மோடி சந்தித்தபோது ஹீராபென் நல்ல உடல்நிலையில்தான் இருந்தார்.

உடல்நிலை
ஆனால் கடந்த 10 நாட்களாக ஹீராபென் உடல்நிலை நலிவடைந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் ஹீராபென் உடல்நிலை இன்னும் மோசமானது. இதன் காரணமாக ஹீராபென் மோடி குஜராத்தில் இருக்கும் யு என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹீராபென் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு வயிற்று போக்கு, கடுமையான உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

சிகிச்சை
இதனால் பேச முடியாமல், கடுமையாக சிரமப்பட்ட அவர் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து பிரதமர் மோடியும் அவரை நேரில் சென்று சந்தித்தார். மருத்துவமனையில் தனது தாயாரை பிரதமர் மோடி சந்திக்கும் புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு பின்பாக ஹீராபென் உடல்நிலை மோசமாகி இருக்கிறது. அவரால் மூச்சு விட முடியாமல் திணறி இருக்கிறார். அவரின் உடல்நிலை மோசமான தகவல் மாநில அரசுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன நடந்தது?
இதையடுத்து அதிகாலை 3.30 மணி அளவில் ஹீராபென் காலமானார். இதற்கு முன்பாகவே அவரின் உடல்நிலை மிக மோசமாக நலிவடைந்துவிட்டதாக பிரதமர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் ஹீராபென் மரணம் அடைந்த தகவலும் பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதிகாலை என்பதாலும், சில ப்ரோட்டோகால்களை பின்பற்ற வேண்டும் என்பதாலும் பிரதமர் மோடி 5 மணிக்குத்தான் டெல்லியில் இருந்து குஜராத் கிளம்பினார். அவர் மருத்துவமனைக்கு வந்தால் முறையாக பாதுகாப்பு கொடுக்க முடியாது.

தகவல்
இதனால் ஹீராபென் உடலை அவரின் வீட்டிற்கே கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் மோடி குஜராத் வர 7 மணி அளவில் ஆகிவிடும். இதனால் பிரதமர் மோடியை நேரடியாக வீட்டிற்கு வர வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பிரதமர் மோடியின் வீட்டை சுற்றி பாதுகாப்புகள் செய்யப்பட்டு அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று பிரதமர் மோடி கொல்கத்தா செல்வதாக இருந்தது. வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க அவர் கொல்கத்தா செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ஆன்லைன் வழியாக குஜராத்தில் இருந்தே இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications