For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்.. என்ன ஆடைன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பதி சென்ற பெண்ணை பாய்ந்து தாக்கிய கரடி | கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கணவர்

    போபால் : கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை கணவர் திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எந்த ஆடையை திருடிக் கொடுத்தார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க.

    மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு திருமணமாகிவிட்டது. மனைவி அந்த மாநிலத்தில் போலீஸில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஜிதேந்திர ராய்க்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கீதா மீதிருந்த மயக்கத்தால் மனைவியை பிரிந்து விட்டு அவருடனேயே வாழ ராய் முடிவு செய்தார்.

    சங்கீதா

    சங்கீதா

    ஆனால் வாழ்வதற்கு தேவையான பணத்துக்கு எங்கே போவது என்பது குறித்து ஜிதேந்திர ராய் யோசனை செய்தார். அப்போது அவருக்கு வித்தியாசமான யோசனை வந்தது. அதாவது மனைவியின் போலீஸ் சீருடையை திருடி சங்கீதாவுக்கு கொடுத்துவிட்டார்.

    வாழ்க்கை

    வாழ்க்கை

    அத்தோடு விட்டாரா இந்த ஜிதேந்திர ராய், சங்கீதாவுக்கு போலி அடையாள அட்டைகளையும் ரெடி செய்து கொடுத்துவிட்டார். இதை பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்து இவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

    போலி சான்றிதழ்

    போலி சான்றிதழ்

    இதுகுறித்து மனைவிக்கு தெரியவந்தது. பின்னர் அவர் சங்கீதா மக்களை ஏமாற்றி பணம் பறித்த போது கையும் களவுமாக பிடித்தார். அப்படியே இதற்கு காரணமான ஜிதேந்திர ராயையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜிதேந்திர ராய்

    ஜிதேந்திர ராய்

    கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியின் டிரஸ்ஸை திருடி கொடுத்த சம்பவம் பெரும் சிரிப்பை வரவழைக்கிறது.மேலும் மனைவியின் உடையும் கள்ளக்காதலியின் உடையும் ஒரே அளவாக இருந்தது ஜிதேந்திர ராய்க்கு கிடைத்த லக் என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

    English summary
    Police arrested a woman with her boyfriend for committing robberies in the name COP near Indore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X