ஆர்எஸ்எஸ்-ல் சேராவிட்டால் இந்து இல்லை... பாஜக எம்எல்ஏ பகீர் கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணையாவிட்டால் உண்மையான இந்து இல்லை என்று ஹைதராபாத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பேக்டரி தான் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற ஐகான்களை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஹைதாராபாத் பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தினமும் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் ஷகாஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் இந்துவாக இருக்க முடியாது என்றார்.

Hyderabad BJP MLAs speech over RSS and Hindus raised criticism

''ஆர்எஸ்எஸ் என்பது ஒரு உற்பத்தி ஆலை போன்றது. அங்கிருந்துதான் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற சிறந்த தலைவர்கள் உருவானார்கள். ஆகையால் நீங்கள் அனைவரும் அருகில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் உங்களது பெயரை பதிவு செய்து உறுப்பினராக வேண்டும்.

சேவை செய்ய முடியாது

ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேராதவர்கள் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. அவர்களால் நாட்டுக்கு எந்த சேவையும் செய்ய முடியாது" என்றும் ராஜாசிங் கூறியுள்ளார்.

நாடு ஏற்காது

இந்த நாட்டில் இருக்கும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ''பாரத் மாதா கி ஜெய்'' ''வந்தே மாதரம்'' என்று கூற வேண்டும். அப்படி கூற விருப்பம் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம். எதிரி நாட்டை ஊக்குவிப்பது மற்றும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் யாரையும் உலகில் எந்த நாடும் ஏற்றுக் கொள்ளாது.

தீவிரவாதத்திற்கு எதிரான குரல்

நமது நாட்டில் தான் ''பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என்றும் அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக குரல்களை எழுப்புகின்றனர்". இந்துக்கள் தங்களின் மதம் மேம்பட லவ் ஜிகாத் போன்ற சாத்தான்களுக்கு எதிராகப் போராட வேண்டும்.

இந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் முதலில் லவ் ஜிகாத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதே போன்று கிறித்தவ அமைப்புகளால் மழைவாழ் மக்களிடையே செய்யப்படும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ராஜா சிங் கூறியுள்ளார். பொதுமேடையில் ராஜாசிங் பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP MLA Rajasingh from Hyderabad said those who don't go to the daily meetings held by the RSS - called 'shakhas' aren't Hindus and also says RSS factory only produces icons like PM Modi and UP CM yogi Adityanath.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற