For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் நினைச்சா "சின்னம்மா"வையே வெளில கொண்டு வர முடியும்.. தினகரனிடம் பீலா விட்ட புரோக்கர்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: நான் நினைத்தால் சசிகலாவையே சிறையிலிருந்து வெளியே கொண்டு வர முடியும் என கைது செய்யப்பட்ட பெங்களூரு புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், தினகரனிடம் கூறியதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"புறம்போக்கு" என்று சொல்வார்கள் தெரியுமா.. அந்த வார்த்தைக்கு முழு வடிவம் இந்த சுகேஷ்தான். பணம், போதை, பெண், சொகுசு என சகலகத்துக்கும் அடிமையானவர் இவர். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். என்ன வேலை வேண்டுமானாம் செய்வார்.

அவருக்குத் தேவை பணம்தான். அந்தப் பணத்தை யார் கொடுத்தாலும் அவர்களுக்காக எந்த வேலையை வேண்டுமானாலும் செய்வார். இவர் ஒரு சிறைப் பறவை. எத்தனையோ முறை உள்ளே போய் விட்டார். ஆனாலும் அது இவரை எந்த வகையிலும் முடக்கிப் போட்டதில்லை.

பெற்றோரால் வெறுக்கப்பட்டவர்

பெற்றோரால் வெறுக்கப்பட்டவர்

நம்மை வெறுக்காத ஒருவர் யார் என்றால் அது நம்முடைய பெற்றோராகத்தான் இருக்க முடியும். ஆனால் சுகேஷ் விஷயத்தில் அவரது பெற்றோரை இவரை வெறுத்தனர். கைவிட்டு விட்டனர். இவன் திருந்த மாட்டான் என்று சுகேஷை அவரது தந்தை வெறுத்து ஒதுக்கி விட்டார்.

தினகரனுக்கு உதவப் போய்

தினகரனுக்கு உதவப் போய்

தற்போது தினகரன் விஷயத்தில் அடிபட்டு நாடு முழுவதும் தெரிந்த முகமாகியுள்ளார் சுகேஷ். டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷை தற்போது 8 நாள் காவலில் டெல்லி காவல்துறை எடுத்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகின்றனவாம்.

அதிகாரிகளுக்கு பணம் தர

அதிகாரிகளுக்கு பணம் தர

போலீஸ் விசாரணையின்போது சுகேஷ் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு சாதகமாக வாங்கித் தர உதவுமாறு தினகரன் என்னை அணுகினார். இதற்காக ரூ. 50 கோடி வரை தரத் தயார் என்றும் கூறினார். அதன் ஒரு பகுதியாக ரூ. 1.3 கோடி பணம் கொடுத்தனர். அதை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு வழங்க பெற்றிருந்தேன்.

செல்வாக்கு நிறைய

செல்வாக்கு நிறைய

நான் தினகரனிடம் நீங்க கவலைப்படாதீங்க. டெல்லியில் எனக்கு செல்வாக்கு உள்ளது. எனவே என்னால் நிச்சயம் இதை சாதிக்க முடியும் என்று அவருக்கு நான் உறுதியளித்திருந்தேன் என்று கூறியுள்ளார் சுகேஷ்.

சசிகலாவையும் வெளியே கொண்டு வர முடியும்

சசிகலாவையும் வெளியே கொண்டு வர முடியும்

இதை விட பெரிய காமெடி என்னவென்றால், தான் நினைத்தால் சசிகலாவையே சிறையை விட்டு வெளியே கொண்டு வர முடியும் என்று இந்த சுகேஷ், தினகரனுக்கு கூறியதுதான். அதை தினகரன் நம்பினாரா என்றுதான் தெரியவில்லை.

English summary
Addicted to a good life-style and a life of conning people, Sukesh Chandrasekhar was a son who was disowned by his parents. His father who worked at a bank disowned him after realising that his son was a repeat offender. Sukesh is alleged to have told Dinakaran that he is very influential person, well connected in the Delhi circles. He had also assured Dinakaran that he could get his aunt Sasikala Natarajan out of the Bengaluru central jail where she is doing time after being convicted in the disproportionate assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X