For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.ஏ.எஸ் வெற்றி பெற்றால் இனி பயிற்சி டெல்லியில்தான் - அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இனி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுகின்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டெல்லியில் பயிற்சி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையினை மத்திய பணியாளர் நல அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர்கள் தாங்கள் பணி புரிய விரும்பும் மாநிலங்களில் பயிற்சி பெறுவதும், அதன்பிறகு அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.

IAS probationers to start their career from Delhi...

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு தேசிய தலைநகர் டெல்லியில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் நல அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற இரா சிங்கால், நிதி குப்தா, வந்தனா ராவ் ஆகியோருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது ஜிதேந்திர சிங் இத்தகவலை வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளின் திறனை மெருகேற்றும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசு 3 மாத கால பயிற்சியை அளிக்கும். தங்களுடைய கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கும், மத்திய அரசின் அலுவல்களை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும்" என்று குறிப்பிட்டார்.

English summary
In a first, IAS probationers will start their career from Delhi instead of cadre states they have been allocated, Union Minister Jitendra Singh has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X