For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் ஐஐஎஸ்சி நடத்தும் பிரவேகா: அறிவியல், தொழில்நுட்ப, கலாச்சார விழா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி கல்வி நிறுவனம் பிரவேகா 2014 என்ற அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார விழாவை நாளை முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடத்துகிறது.

பெங்களூரில் 443 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ்(ஐஐஎஸ்சி) பிரவேகா 2014 என்ற அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார விழாவை நாளை முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை தொர்ந்து 3 நாட்கள் நடத்துகிறது.

இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் ஐஐடி, ஐஐஎஸ்இஆர் போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 500 மாணவ, மாணவியர் கலந்து கொள்கிறார்கள்.

IISc Bangalore hosts Pravega 2014. A Science, Tech and Cultural Fest

இந்த 3 நாள் விழாவின்போது மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் பிரபலங்கள் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார்கள். இது தவிர பயிலரங்கு, தொழில்நுட்ப கண்காட்சி, வினாடி வினா போட்டியும் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய பிரனவ் முந்தாதா - 8970043793 - [email protected], சுஹாஸ் மகேஷ் - 9901500685, அபார் ஷங்கர் - 9448173199 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் அல்லது http://www.pravega.org/ என்ற இணையதளத்தில் சென்றும் பார்க்கலாம்.

பிரவேகாவின் ஆன்லைன் மீடியா பார்ட்னர் ஒன்இந்தியா நிறுவனத்தின் கல்வி பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Country's Premier Research Institute, Indian Institute of Science (IISc), Bangalore, is hosting "Pravega 2014", a Science, Technology and Cultural Fest from 31st January to 2nd February.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X