For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி கேட்கும் நவ்நீத் ராணா எம்.பி

By BBC News தமிழ்
|
மகாராஷ்டிரா சிவசேனை
ANI
மகாராஷ்டிரா சிவசேனை

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியான மஹாவிகாஸ் அகாடி அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில், அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சனிக்கிழமை கோரியிருக்கிறார் அமராவதி தொகுதி சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா.

"உத்தவ் தாக்கரேவை விட்டு வெளியேறி, சொந்தமாக முடிவெடுக்கும் எம்எல்ஏக்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்துகிறேன். உத்தவ் தாக்கரேவின் குண்டர்த்தனம் முடிவுக்கு வர வேண்டும். மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று நவ்நீத் ராணா கூறியுள்ளார்.

சிவசேனை கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ தானாஜி சாவத்தின் அலுவலகம், ஆத்திரமடைந்த கட்சியினரால் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, எம்பி நவ்நீத் ராணாவின் இந்த கடுமையான எதிர்வினை வந்திருக்கிறது.

இதற்கிடையே, சிவசேனைகட்சியின் செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுட் விளக்கினார்.

சிவசேனை தேசிய செயற்குழுவில், தற்போதைய அரசியல் நெருக்கடியான சூழலில் கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமைகளை உத்தவ் தாக்கரே தொடர்ந்து பெறுவார். கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார் என்று சஞ்சய் ரவுட் கூறினார்.இந்துக்களின் இதயத்தில் பேரரசராக இடம்பிடித்துள்ள பாலாசாகேப் தாக்கரே மற்றும் சிவசேனையின் பெயர்களை யாரும் பயன்படுத்த முடியாது என்று கூறிய அவர், அதிருப்தி எம்எல்ஏக்கள் மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும் என்றால் அவரவர் தந்தையின் பெயரில் கேட்க வேண்டுமே தவிர சிவசேனையின் தந்தை பெயரில் இல்லை என்று தெரிவித்தார்.

குவாஹத்தியில் ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்த சிவசேனை எம்எல்ஏக்களில் தானாஜி சாவந்தும் ஒருவர். செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தகவலின்படி, தற்போது அவர் குவாஹத்தில் முகாமிட்டுள்ளார்.

சிவசேனை உள்ளூர் தலைவர் ஒருவர் புணேயில் கட்சிக்காரர்கள் சிலர் தானாஜி சாவந்தின் அலுவலகத்தை சேதப்படுத்தியதாகக் கூறினார்.

சிவசேனை மகாராஷ்டிரா
BBC
சிவசேனை மகாராஷ்டிரா

மும்பையில் 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனையில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்திய பிறகு, மாநிலத்தில் பல இடங்களில் சிவசேனை தொண்டர்கள் கடும் கோபத்துடன் காணப்படுகின்றனர்.

https://twitter.com/ANI/status/1540646009297969155

அதிருப்தியாளர்கள் பலர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் சிலர் அவரை ஆதரிக்கும் எம்எல்ஏக்களை எதிர்க்கின்றனர். பல இடங்களில் அந்த எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=0xS3508n2Qg&t=1s

இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

அரசியல் அதிகாரப் போட்டியின் போது மாவட்டம், மாநகரில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். இந்த உத்தரவை மீறும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை போலீசார் கைது செய்யலாம்.

சிவசேனை
AFP
சிவசேனை

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு புதிய பெயர்இதற்கிடையே, தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பிரிவுக்கு 'சிவசேனா பாலாசாகேப்' என்று பெயரிட ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளார்.

குவாஹத்தியில் ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கும் எம்எல்ஏ டாக்டர் பாலாஜி கினிகர் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

ஷிண்டே அணியின் பெயரை அதிகாரபூர்வமாக வெளியிட்டால் அதற்கு சிவசேனை தலைமை கடும் ஆட்சேபத்தை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/ANI/status/1540605303666135040

இந்த விவகாரம் குறித்து தீபக் கேசர்கர் எம்எல்ஏ கூறுகையில், "பாலா சாஹேபின் சித்தாந்தத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே சுயேச்சை பிரிந்திருக்கிறோம். நாங்கள் விரும்பும் பாதையை அடைய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது. எங்களுடைய புதிய தலைவர் பெரும்பான்மை அடிப்படையில் தேர்வாகியிருக்கிறார். அவர்களிடம் 16-17 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். கட்சியை விட்டு யாரும் வெளியேறவில்லை. நாங்கள் சிவசேனையிலேயே இருக்கிறோம்" என்கிறார்.

https://twitter.com/ANI/status/1540651861325541376

சிவசேனை கட்சியின் சுமார் 40 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் மாநிலத்தில் ஆளும் அரசுக்கு உள்ள நெருக்கடி தற்போது தீவிரமாகியிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=Y2yv7pd1Dw8

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
'Impose President Rule in Maharashtra', Navneet Rana's message to Amit Shah
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X