For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிவியில் பேசுவது எப்படி.. செய்தித் தொடர்பாளர்களுக்கு 'டிப்ஸ்' தருகிறார் ராகுல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடியை டீ விற்றவர் என்று மணிசங்கர அய்யர் பேசியது தவறு . யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தின்போது மணிசங்கர அய்யர் மோடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. டெல்லியில் நடந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுடனான சந்திப்பின்போது இவ்வாறு அட்வைஸ் செய்தார் ராகுல்.

போட்டுக் கொடுத்த ராஜீவ் சுக்லா

போட்டுக் கொடுத்த ராஜீவ் சுக்லா

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ராஜீவ் சுக்லா, மணிசங்கர அய்யரின் டீ விற்றவர் பேச்சு குறித்து பிரச்சினை கிளப்பினார். இதற்குப் பதிலளித்தார் ராகுல்.

தனிப்பட்ட முறையில் தாக்கக் கூடாது

தனிப்பட்ட முறையில் தாக்கக் கூடாது

தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாக்கிப் பேசுவது தவறு. அதைத் தவிர்க்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

சுமார் ஒரு மணி நேரம்

சுமார் ஒரு மணி நேரம்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் ராகுல் காந்தி.

டிவியில் பேசுவதற்கான பெப் டாக்...

டிவியில் பேசுவதற்கான பெப் டாக்...

இந்த செய்தித் தொடர்பாளர்கள் டிவி உள்ளிட்ட மீடியாக்களில் நடைபெறும் விவாதங்கள் உள்ளிட்டவற்றில் பேசும்போது எப்படிப் பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் என்பது தொடர்பான டிப்ஸ்களை அப்போது கொடுத்தாராம் ராகுல்.

சரி.. ராகுலுக்கு யார் டிப்ஸ் தருவது

சரி.. ராகுலுக்கு யார் டிப்ஸ் தருவது

சமீபத்தில்தான் ராகுல் காந்தி முதல் முறையாக ஒரு டிவி பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் அது பாராட்டுக்களுக்குப் பதில் கடும் விமர்சனங்களையும், கேலிகளையும் சம்பாதித்தது என்பது நினைவிருக்கலாம்.

English summary
Rahul Gandhi this evening told national spokespersons of the Congress to keep their political campaign positive and avoid personal comments. At a meeting in the party's war-room, Union minister Rajeev Shukla raised the chaiwala remark made by Mani Shankar Aiyar against Narendra Modi, the BJP's choice for Prime Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X