For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்தின் புதிய கட்சியின் பெயர் ‘ராஷ்டிரிய ஆம்’...

Google Oneindia Tamil News

மும்பை: ராஷ்டிரிய ஆம் கட்சி' என்ற பெயரில் நேற்று முந்தினம் தனது புதிய கட்சியைத் துவக்கியுள்ளார் பாலிவுட் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதையடுத்து தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் களம் இறக்கியுள்ளனர். மேலும் இத்தேர்தலில் மூத்த நடிகர்களான சத்ருகன் சின்கா, ஹேமமாலினி, கிரண்கெர், குல் பனாக் உள்ளிட்ட பலரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சுயேட்சை முடிவு....

சுயேட்சை முடிவு....

ராக்கி சாவந்தின் அரசியம் ஆர்வம் கண்டு, பாஜக அவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தது. ஆனால், பாஜகவின் அழைப்பை புறக்கணித்த ராக்கி சாவந்த் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

மும்பை தான் என் ஏரியா...

மும்பை தான் என் ஏரியா...

மேற்குவங்க மாநிலத்தில் போட்டியிடுமாறு பாஜக கூறியதாலேயே அவர்களது அழைப்பை புறக்கணித்ததாக கூறிய ராக்கி சாவந்த், தனக்கு செல்வாக்கான பகுதி மும்பை தான் எனக் கூறி வந்தார்.

மனுத்தாக்கல்...

மனுத்தாக்கல்...

அதன்படி, மும்பை வடமேற்கு தொகுதியில் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் சென்று மனு தாக்கலும் செய்தார்.

தனிக்கட்சி தொடங்கலாமா...?

தனிக்கட்சி தொடங்கலாமா...?

ஆனால், திடீரென தனது சுயேட்சை முடிவைக் கைவிட்ட ராக்கி சாவந்த் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக தனது நெருக்கமான நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் ராக்கி சாவந்த்.

ராஷ்டிரிய ஆம் கட்சி...

ராஷ்டிரிய ஆம் கட்சி...

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்த கையோடு புதிய கட்சி தொடங்குவதாகவும் அறிவித்தார் ராக்கி. தனது கட்சிக்கு ‘ராஷ்டிரிய ஆம்' எனப் பெயரிட்டார். தனக்கு நெருக்கமான பலரை கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் ராக்கி சாவந்த்.

கட்சித் தொடக்க விழா...

கட்சித் தொடக்க விழா...

ராக்கி சாவந்த்தின் புதிய கட்சி தொடக்க விழா நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் கூறுகையில், ‘எனக்கு அரசியல் பண்ண தெரியாது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

மக்கள் சேவை....

மக்கள் சேவை....

மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்குள் நுழைந்துள்ளேன். சமூக சேவை செய்வதே என் நோக்கம். ஒருபோதும் அதிகாரத்துக்கு ஆசைப்பட மாட்டேன். நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.

தற்காப்புக்கலைகள்....

தற்காப்புக்கலைகள்....

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். பெண்கள் தற்காப்பு கலைகளை கற்று கொள்ள வேண்டும்' என இவ்வாறு தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.

எங்கள் சின்னம்...

எங்கள் சின்னம்...

மேலும், தனது கட்சிக்கு ‘பச்சை மிளகாய்' சின்னம் ஒதுக்கக் கோரிக்கை விடுத்துள்ளாராம் ராக்கி சாவந்த்.

English summary
Rakhi Sawant is now not only a candidate in the Lok Sabha elections but even has her own political party: the Rashtriya Aam Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X